தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக- அதிமுக ஆகிய பலம்பெரும் கட்சியை வீழ்த்தி தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது.

விஜயபாஸ்கர் மீது தொடரும் விமர்சனம்:

தவெக வெற்றி பெற்ற பிறகு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சியில் இருந்தும் பலரும் மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை கட்சியில் இணைந்தனர். குறிப்பாக, அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.

அதிமுக-வினர் தொடர்ந்து தவெக-வில் இணைந்து வருவது தவெக-விற்கு பின்னடைவைாகவும் விமர்சனமாகவும் உள்ளது. குறிப்பாக, குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கரை கட்சியில் சேர்த்தது மிகப்பெரிய விமர்சனத்தை தவெக மீது உண்டாக்கியது. தவெக-வில் இணைந்தது முதலே தினசரி விதம், விதமான அரசியல் ஸ்டண்ட்களை விஜயபாஸ்கர் மேற்கொண்டு வருகிறார்.

ஆடல், பாடல்:

இது அதிமுக இல்ல விஜயபாஸ்கர் அவர்களே.....@BussyAnand இதை நிறுத்தி கொள்வது கட்சி க்கு நல்லது pic.twitter.com/b3Mh5aO5qA

— முரளி 🆅︎🅹︎ (@Muralivj84) August 30, 2026

புதுக்கோட்டையில் நடந்த தவெக ஆட்சியின் 100 நாள் கொண்டாட்டத்தின்போது விழா மேடையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இதற்கு தவெக-வினர், விஜய் ரசிகர்கள், தவெக-வின் பெரும்பலபமான விர்ச்சுவர் வாரியர் எனப்படும் சமூக வலைதள ஆதரவாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

திராவிட கட்சிகளில் நடத்துவது போல தவெக-விலும் செய்யலாமா? இதற்குத்தான் விஜயபாஸ்கரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று கூறினோம் என்று பலரும் இணையத்தில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்பாடுகளை தொடக்கத்திலே நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோருக்கு இணையத்தின் வழியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குவியும் விமர்சனங்கள்:

மாற்றத்திற்காக இளைஞர்கள் இளைஞிகள் அவர்களது குடும்பங்கள் சேர்ந்து வாக்களித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது

எந்த விதமான கொள்கையும் கோட்பாடுகளும் இல்லாத குட்கா விஜயபாஸ்கர் போன்ற ஊழல் பெருச்சாளிகள் கட்சிக்குள் வந்தால் கட்சியை எப்படி சீரளிப்பார்கள் என்பதற்கு உதாரணம்… pic.twitter.com/c20bWu2Rme

— கபிலன் (@_kabilans) August 30, 2026

புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் முகமது பர்வேஸை ஓரங்கட்டி புதுக்கோட்டை தவெக-வில் கோலோச்ச விஜயபாஸ்கர் காய் நகர்த்தி வருவதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும், விஜயபாஸ்கருடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவதால் அமைச்சர் பர்வேஸ் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதனால், நடந்து முடியும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு முகமது பர்வேஸின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

Source: Read Full Article