சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்காக தமிழக அரசு கையகப்படுத்தியுள்ள நிலத்தில் 5,500 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அப்பகுதியில் உள்ள 33 ஏரிகளையும் இணைத்து நீர்த்தேக்கம் உருவாக்கினால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக அதனை வரையறை செய்து அறிவிக்கை (நோட்டிபிகேஷன்) வெளியிட வேண்டும் என கோரி துரைப்பாக்கம் முதல் பள்ளிக்கரணை வரை பாமக தலைவர் அன்புமணி மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் வழிநெடுக்க வாகன ஓட்டிகளுக்கும் வணிகர்களுக்கும் பொது மக்களுக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்ன என்பது குறித்த துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி பேச்சு:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் இன்னும் நான்கு ஆண்டுகளில் தன்னுடைய உச்ச நலையை எட்டிவிடும். சர்வதேச விமான நிலையங்களில் இருப்பது போல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் ஓடுதளம் தரமாகவும்,வசதியாகவும் இல்லை. அளவும் மிகச் சிறிதாக இருக்கிறது. மிகப்பெரிய விமானங்கள் இறங்க வேண்டுமானால் 60 மீட்டர் ஓடுதளம் வேண்டும் ஆனால் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஓடுதளம் 45 மீட்டர் மட்டுமே உள்ளது இது போதுமானது இல்லை. அதனால்தான் பெங்களூருக்கு வரும் பெரிய விமானங்கள் சென்னைக்கு வர முடிவதில்லை.

இது தவிர சென்னை விமான நிலையத்தில் 'கார்கோ விமான' வசதி போதுமானதாக இல்லை மீனம்பாக்கம் விமான நிலையம் ஜிஎஸ்டி பிரதான சாலையில் அமைந்துள்ளது அந்த வழியாக கண்டெய்னர் லாரிகள் வந்து செல்வது முடியாத காரியம். சென்னைக்கு கட்டாயம் இரண்டாவது விமான நிலையம் வேண்டும் ஆனால் அதை எங்கே கொண்டு வருவது என்பதுதான் பிரச்சினையாக உள்ளது.பரந்தூரில் விவசாய நிலங்கள் அழிக்கப்படக்கூடாது. தமிழக அரசு ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள் அதை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோன்று செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தக்கூடாது எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

அதே நேரத்தில் பரந்தூரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் தொழிற்சாலைகள் கொண்டுவர இருப்பதாக அமைச்சர் பேசியிருக்கின்றார், இதை ஏற்றுக்கொள்ள முடியாது விமான நிலையம் விவசாயத்தை அழிக்கும் என்றால் தொழிற்சாலைகள் அதைவிட மோசமாக பாழாக்கும். சென்னை விமான நிலையம் என்பது சென்னையின் வளர்ச்சிக்கு கிடையாது அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. விவசாயத்தை அழித்து தொழில் வளர்ச்சி என்று கொண்டு வருவதை பாமக விரும்பவில்லை.

பரந்தூரில் 5700 ஏக்கரை கைப்பற்றி இருப்பதாக தமிழக அரசு சொல்கிறது அந்த இடத்தை என்ன செய்ய வேண்டும் என நாங்கள் ஒரு யோசனை சொல்கிறோம்..கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டத்திற்கு தான் பயன்படுத்த வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது. அதை மீறி வேறு ஏதாவது திட்டத்திற்கு பயன்படுத்தினால் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும். நானே வந்து போராட்டம் நடத்துவேன். அந்த 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்கலாம். அங்கு 33 ஏரி இருப்பதாக தமிழக அரசு சொல்கிறது அந்த அனைத்து ஏரிகளையும் இணைத்து இந்த நீர்த்தேக்கத்தை உருவாக்க வேண்டும்.

5500 ஏக்கரில் ஒரு பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்குங்கள் அது சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்ட மக்களுக்கும் பெரிய பயனாக இருக்கும். அதே நேரத்தில் சென்னைக்கு ஒரு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது மக்களுக்கு அதிக பாதிப்பு இல்லாத இடமாக தேர்வு செய்து உடனடியாக இரண்டாவது விமான நிலையத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேற்றைய தினம் கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஒரு மடத்தில் பேசுகிறார்.. கிருஷ்ணராஜ சாகர் அணையை கட்டிய பிறகு கர்நாடகா விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு நன்மை கிடைத்ததோ அதேபோல மேகதாது அணையை கட்டினால் கர்நாடகா விவசாயிகளுக்கு இன்னும் கூடுதல் நன்மை கிடைக்கும் என்று பேசியிருக்கிறார்.
ஆனால் இதே டி.கே சிவகுமார் கடந்த மாதம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறார் ஒரு 'பக்கெட்'தண்ணீரை கூட நாங்கள் மேகதாவிலிருந்து விவசாயத்திற்கு பயன்படுத்த மாட்டோம்; பெங்களூரு மாநிலத்தின் குடி தண்ணீருக்காக மட்டும்தான் மேகதாதுவில் அணை கட்டுகிறோம் என்று பேசி இருந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எவ்வளவு பொய் பேசலாமா?.

பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 5 டிஎம்சி தண்ணீர் தான் வேண்டும் பிறகு எதற்காக 67 டிஎம்சி யில் மேகதாவில் அணைகட்ட கர்நாடக அரசு துடிக்கிறது என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். 12,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட இருப்பதாக முன்பு பேசி இருந்தோம் ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் விவரங்களை பார்த்தால் 13 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகளை அடித்து மேகதாதுவில் அணை கட்ட வேண்டுமா எனவும் அன்புமணி கேள்வி எழுப்பினார். இந்த மூன்று மாதத்தில் நான்கு முறை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் டி கே சிவகுமார் மற்றும் அந்த மாநிலத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள் டெல்லி சென்று மேகதாதுவில் அணை கட்டுவது சம்பந்தமான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் தமிழக அரசு வாய்மொழி மௌனியாக இருக்கின்றது.

மற்ற கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை தமிழக முதலமைச்சராவது தன்னுடைய அமைச்சர்களை அழைத்துக் கண்டு பிரதமரையும் நீர் வளத்துறை அமைச்சரையும் சந்தித்து இதனை தடுப்பதற்கு தேவையான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமா? தமிழக அரசு அரசியல் அழுத்தம், சட்ட அழுத்தம் கொடுக்க வேண்டும்.. கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறந்துடுக்கப்பட வேண்டும் ஆனால் தண்ணீர் இல்லாத காரணத்தால் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதலமைச்சர் சேலம் சென்று தண்ணீர் திறக்க இருக்கிறார். காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறார்? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டால் மட்டும் போதாது அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி விவகாரம் என்பது சாதாரண பிரச்சனை கிடையாது ஐந்து கோடி மக்களுடைய பிரச்சனை கர்நாடக அரசு உபரி நீரை மட்டும்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது நமக்கு கொடுக்க வேண்டிய உரிய பங்கை கொடுக்கவில்லை.

Source: Read Full Article