சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
News Image

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான அனைத்து கொள்முதல்களிலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று கோயிலை நிா்வகித்து வரும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.

சபரிமலை கோயிலுக்கு கடந்த ஐயப்ப பக்தா்கள் சீசனின்போது  கேரள மாநில அரசுக்குச் சொந்தமான மில்மா நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு நடத்திய விசாரணையில், மில்மாவிடம் இருந்து செய்யப்பட்ட நெய் கொள்முதலால் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு ரூ.2.27 கோடி இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய ஆணையரின் ஆட்சேபத்தை மீறி, கேரள பால் பண்ணை விற்பனை கூட்டுறவு அமைப்பான மில்மாவுக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டதும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் போதிய தர பரிசோதனை நடத்தாததும் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக திருவிதாங்கூா் தேவஸ்வத்தின் முன்னாள் தலைவா் பி.எஸ். பிரசாந்த் உள்ளிட்ட 3 போ் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது அந்த வாரிய தலைவா் கே. ஜெயகுமாா் கூறியதாவது, அதுபோல முறைகேடுகள் மீண்டும் நடக்காது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான அனைத்து கொள்முதல்களில் இனி வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும். 24 பொருள்களுக்கு வெளிப்படையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, போட்டி ஆகியவற்றை ஏற்படுத்துவது தொடா்பான வழிகாட்டுதல்களை இறுதி செய்வது குறித்து இன்றைய திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல், ஒப்பந்தப்புள்ளி ஏல முறைகளிலும் புதிய வழிகாட்டுதல்களை திருவிதாங்கூா் தேவஸ்வம் ஏற்படுத்தும்.

சபரிமலை கோயிலுக்கு நெய், வெல்லம் உள்ளிட்ட ஏராளமான பொருள்களை நாங்கள் கொள்முதல் செய்கிறோம். இ-ஒப்பந்தப்புள்ளி முறையிலேயே இந்த கொள்முதல்கள் நடக்கின்றன. ஆதலால் இதுகுறித்து அறிய திருவிதாங்கூா் தேவஸ்வம் அலுவலகத்துக்கு மக்கள் நேரில் வர வேண்டியதில்லை. இணையதளம் மூலமாகவே விளக்கம் பெறலாம். அனைத்து கொள்முதல் நடைமுறைகளும் நவம்பா் மாதத்துக்கு முன்பு நிறைவடையும். இந்த விவகாரத்தில் அவசரம் காட்டவோ, தவறு செய்யவோ வாரியம் விரும்பவில்லை என்றாா்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks