மதிமுகவை விமர்சித்த செங்கோட்டையன்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளுக்கும் தவெகவிற்கு பல்டி அடித்துள்ளது. அந்த வகையில் கடைசியாக மதிமுகவும் தவெகவின் இணைந்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த வாரம் பேசுகையில், அதிமுகவின் நிலை மோசமாக இருப்பதாகவும்,மதிமுக கட்சியைப் போல அதிமுக கட்சியும் ஆகிவிடும். இன்னும் சில நாட்களில் சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள்; தொண்டர்கள் இருக்கமாட்டார்கள் என பேசியிருந்தார். இந்த பேச்சு மதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதிமுக போல் அதிமுக ஆகிவிடும்

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் சு.ஜிவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மதிமுகவின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்க ஆலோசனை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவரிடம், “மதிமுக கட்சியைப் போல அதிமுக கட்சியும் ஆகிவிடும். இன்னும் சில நாட்களில் சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள்; தொண்டர்கள் இருக்கமாட்டார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளாரே?” என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், உண்மையை சொன்னால் கொஞ்சம் கசக்கும். ஆனால் நான் உண்மையைத்தான் பேசுவேன். தவெக தொடங்கும்போது செங்கோட்டையன் தவெகவில் இல்லை. நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இல்லை.

ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை

அவர்கள் வேறு இடங்களில் குடும்பம் நடத்திவிட்டு, இங்கு வாடகை வீட்டுக்கு வந்தவர்கள். அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அவர்களின் தரம் அப்படித்தான் இருக்கும். நாளைக்கு தவெகவின் நிலையில் சறுக்கல் ஏற்பட்டால், இன்னொரு இடத்திற்கு வாடகைக்கு செல்வார்கள். அதனால் அவர்களைப் பற்றி பெரிதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை” என விமர்சித்துள்ளார்.

Source: Read Full Article