நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!

நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
News Image

முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி பேச்சால் கடும் சர்ச்சை

விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது அணைக் கட்டுவதை தடுத்தே ஆக வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவின்  கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜயை தாறுமாறாக விமர்சித்தார்.

அப்போது கூட்டத்திலிருந்து த்ரிஷா என தொண்டர்கள் சிலர் தெரிவிக்க, அப்போது உதயநிதி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள் என பலரும் உதயநிதியையும், திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்

இப்படியான நிலையில் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ.செல்வகுமார் அளித்த புகார் கடிதத்தில், “தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற பொது அரசியல் கூட்டத்தில் நிகழ்ந்த மிகவும் கவலைக்குரிய ஒரு சம்பவத்தை உங்கள் அவசரக் கவனத்திற்குக் கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறோம்.

காவிரி நீர் பகிர்வுப் பிரச்சினை குறித்த உரையின்போது, ​​கூட்டத்தினரின் முழக்கங்களால் தூண்டப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஒரு பொதுவாழ்வில் இருக்கும் பெண்மணியை குறிப்பிட்டு கண்ணியமற்ற இரட்டை அர்த்தம் கொண்ட கருத்துகளையும் ஆபாசமான மறைமுகக் வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.

முக்கியமான அரசியல் மேடையிலிருந்து வெளிப்படுத்தப்படும் இத்தகைய கருத்துகள் பொதுவெளிகளில் பெண்களை வெறும் போகப் பொருளாகச் சித்தரிப்பதையும் வாய்மொழித் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதையும் இயல்பானதாக மாற்றுகிறது. இது பொதுவாழ்வில் இருப்பவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கண்ணியத்தைக் கடுமையாகக் குறைப்பதுடன், பொதுவாழ்வில் உள்ள பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து ஆபத்தான முன்னுதாரணத்தையும் உருவாக்குகிறது.

எனவே தேசிய மகளிர் ஆணையம் உதயநிதி பேசிய வீடியோவை கவனத்தில் கொண்டு முறையான வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விளக்கமளிக்கவும், மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் களத்தில் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் உதயநிதி அல்லது திமுக சார்பில் எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks