Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!

Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
News Image

Donald Trump: இந்தியா உள்ளிட்ட 60 வணிக கூட்டாளிகள் மீது அண்மையில் ட்ரம்ப் 10 முதல் 12.5 சதவிகிதம் வரை புதிய வரியை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்புக்கு எதிராக சொந்த மாநிலங்களே வழக்கு..!

இந்தியா உட்பட 60 வர்த்தக கூட்டாளிகளிடம் இருந்து வரும் பொருட்கள் மீது 10 சதவிகிதம் முதல் 12.5 சதவிகிதம் வரை புதிய வரிகளை விதித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது, 25 அமெரிக்க மாகாணங்களின் கூட்டமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், கடந்த பிப்ரவரியில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட முந்தைய இறக்குமதி வரிகளுக்குப் பதிலாக விதிக்கப்படும் முயற்சி என்றும் அக்கூட்டமைப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கானது, சுங்க வரிகளைத் தடுத்து  அவற்றைச் சட்டவிரோதமானவை என அறிவிப்பதோடு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் முந்தைய "விடுதலை நாள்" வரிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து. 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 301 ஆம் பிரிவின் கீழ் புதிய வரிகள் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்தன.

மாநில நிர்வாகங்களின் குற்றச்சாட்டு என்ன?

நியூயார்க், கலிபோர்னியா, இல்லினாய்ஸ், மாசசூசெட்ஸ், வாஷிங்டன், விஸ்கான்சின் மற்றும் மேலும் 18 மாநிலங்களும், கென்டக்கி மற்றும் பென்சில்வேனியா ஆளுநர்களும் சேர்ந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். மாநிலங்களின் கருத்தப்படி, கடந்த மாதம் 59 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீது விதிக்கப்பட்ட வரிகள், அமெரிக்க இறக்குமதிகளில் 99.4 சதவிகிதத்தை உள்ளடக்கியுள்ளன.  "உச்ச நீதிமன்றத்தில் தோல்வியடைந்த பிறகு, நிர்வாகம் புதிய சுற்று வரிகள் மூலம் குடும்பங்கள் மற்றும் வணிகங்கள் மீது மீண்டும் சட்டவிரோதமாக வரிகளை உயர்த்த முயற்சிக்கிறது. நிர்வாகம் இதை எப்படி நியாயப்படுத்த முயன்றாலும், அதிபர் தான் விரும்பும் எந்த நாடுகளின் மீதும் கடுமையான வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என்று சட்டமும் நமது அரசியலமைப்பும் தெளிவாகக் கூறுகின்றன" என்று என்று நியூயார்க் தலைமை வழக்கறிஞர் லெட்டிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை சொல்வது என்ன?

இந்த வழக்கு குறித்து பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய், சுங்க வரிகளை நியாயப்படுத்தினார். அதன்படி, "அமெரிக்க வர்த்தகத்திற்குச் சுமையாக இருக்கும் நியாயமற்ற செயல்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒழிப்பதற்காக, அமெரிக்கா தனது சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி மீதான தடையை ஒரு வெளிநாடு விதிக்கத் தவறி, அதைத் திறம்பட அமல்படுத்தத் தவறுவது நியாயமற்றது. அது அமெரிக்கத் தொழிலாளர்கள் உட்பட அமெரிக்க வர்த்தகத்திற்குச் சுமையாக உள்ளது. மேலும் இது கவனிக்கப்பட வேண்டும். அதிபரின் முதல் பதவிக்காலத்திலிருந்தே, பிரிவு 301 வரிகள் சட்டப்பூர்வமாக நீடித்த ஒரு கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்போதும் அவை அப்படியே இருக்கின்றன" என விளக்கமளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி

இதுதொடர்பாக பேசியுள்ள நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், “ட்ரம்பின் சட்டவிரோத வரிகள், கடினமாக உழைக்கும் குடும்பங்கள் மீது விதிக்கப்படும் ஒரு வரியைத் தவிர வேறொன்றுமில்லை. இது மளிகைப் பொருட்கள், வீட்டு அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நியூயார்க் மக்கள் சார்ந்திருக்கும் எண்ணற்ற அன்றாடப் பொருட்களின் விலையை உயர்த்துகிறது” என கவலை தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks