<p style="text-align: justify;">சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக ஆளுங்கட்சி உறுப்பினர்களை மட்டுமே சட்டப்பேரவை நேரலையில் காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களின் செயல்பாடுகளை காட்ட மறுப்பதாகவும் பரபரப்பு குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரி வெளிப்படையாக பேசிய நிலையில், இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரிலும் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காட்டப்படவில்லை.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக, வேளாண் துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் தாக்கலின்போது விசில் குறித்தும் ஊழல் பற்றியும் பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது பேச்சுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது கூட அவர்களின் செயல்பாடுகள் காட்டப்படவில்லை. சபாநாயகர் அவர்களை அமரச் சொன்னது மட்டுமே நேரலையில் காட்டப்பட்டது</p>
Source: Read Full Article