<p>நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்தது. அந்த வகையில் தமிழகத்திலும் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்களின் மீது வழக்கானது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அனைத்து வழக்கையும் ரத்து செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p> இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/what-are-the-benefits-to-the-body-of-drinking-ginger-water-on-an-empty-stomach-269812" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article