Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ

Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
News Image

Ajinkya Rahane Pension: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஜிங்க்யா ரகானேவிற்கு, மாத ஓய்வூதியமாக ரூ.70 ஆயிரம் பிசிசிஐ தரப்பில் வழங்கப்படுகிறது.

ரகானேவிற்கான ஓய்வூதியம்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மற்றும் வெளிநாட்டு சுற்றுபயணங்களின் போது நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த அஜிங்க்யா ரகானே கடந்த 30ம் தேதி உடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2021ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, பார்டர் கவாஸ்கர் தொடரை வென்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இவரது தலைமையின் கீழ் தான் இந்தியா கண்டது. ஓய்வை தொடர்ந்து ரகானேவின் வருமானம் மற்றும் சொத்து தொடர்பான விவரங்கள் ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் சம்மேளனத்திடம் இருந்து கணிசமான மாதாந்திர ஓய்வுத்தொகையை வாழ்நாள் முழுவதும் அவர் பெற உள்ளார்.

ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் ஓய்வூதியம்

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை கடந்த 2022ம் ஆண்டு திருத்தி அமைத்து பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, இந்தியாவுக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரகானே, உயர் ஓய்வூதியப் பிரிவில் இடம்பிடிக்கிறார். இதற்கு முன்பு, அவருக்கு இணையாக அனுபவமுள்ள வீரர்கள் மாதம் ரூ.50,000 பெற்றுவந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மாத ஓய்வூதியம் ரூ.70,000 ஆகத் திருத்தி அமைக்கப்பட்டது. அந்த வகையில், ரகானே இனி மாதம் ரூ.70,000 நிலையான ஓய்வூதியமாகப் பெறுவார். ஓய்வூதியத் தொகையைத் திருத்தியமைக்கும் இந்த முடிவு, சௌரவ் கங்குலி பிசிசி தலைவராக இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

ரகானேவின் சர்வதேச கிரிக்கெட் அனுபவம்

85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக களமிறங்கியுள்ள ரகானே, தனது அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கும் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்ட ஆவலுடன் இருப்பதாக அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். பிசிசிஐ அமைப்பில் அதிகாரப்பூர்வப் பதவியை ஏற்காத வரை மட்டுமே அவரது ஓய்வூதியம் செல்லுபடியாகும். ஒருவேளை ரகானே வாரியத்தின் நிர்வாகியாகவோ அல்லது பயிற்சியாளராகவோ பதவியேற்கும் பட்சத்தில், அந்தப் பணிகளுக்காக அவர் சம்பளம் பெறும் வரை அவரது ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

இதையும் படியுங்கள்: Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்

ரோகித் சர்மா, கோலிக்கான ஓய்வூதியம் என்ன?

25 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் ஆடவர் கிரிக்கெட் வீரர்கள், மாதம் ரூ.70,000 என்ற அதிகப்படியான ஓய்வூதியத் தொகையை பெற தகுதி பெறுகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா (67 டெஸ்ட் போட்டிகள்) மற்றும் விராட் கோலி (120 போட்டிகள்)ஆகிய இரு வீரர்களும் இந்த வரம்பை எளிதாகக் கடக்கின்றனர். எனவே இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ரூ.70 ஆயிரத்தை ஓய்வூதியமாக பெறுவர்.

75-க்கும் அதிகமான முதல் தர போட்டிகளில் விளையாடிவர்களுக்கு மாதம் ரூ.52,500 ஓய்வூதியம்

50 முதல் 74 முதல் தர போட்டிகளில் விளையாடிவர்களுக்கு மாதம் ரூ.45,000 ஓய்வூதியம்

25 முதல் 49 முதல் தர போட்டிகளில் விளையாடிவர்களுக்கு மாதம் ரூ.30,000 ஓய்வூதியம்

பிசிசிஐ ஓய்வூதிய விதிகள்

25-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள், மாதம் ரூ.60,000 என்ற குறைக்கப்பட்டதிருத்தப்பட்ட ஓய்வூதியத்தை பெறுவார்கள்

ஐபிஎல் போன்ற வடிவங்கள் ஓய்வூதிய அடிப்படைத் தொகையை நிர்ணயிப்பதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை

பிசிசிஐ-யின் ஓய்வூதிய தகுதி என்பது டெஸ்ட் மற்றும் முதல் தரப் போட்டிகளின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்துள்ளது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks