சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!

சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
News Image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய ரயில்வே நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று, மூன்று முக்கிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் மற்றும் வழித்தட நீட்டிப்பு பணிகளை அமைச்சர்கள் முறைப்படி தொடங்கி வைத்தனர்.

புதிய பேருந்து வழித்தடங்கள் மற்றும் கிராமமக்களின் மகிழ்ச்சி

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. இரஞ்சித்குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதன்படி, விஷார் முதல் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை மேல்கதிர்பூர் வழியாக புதிய பேருந்து சேவை வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முத்தியால்பேட்டை முதல் காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையம் வரையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையம் வரையிலும் இரண்டு புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. வரலாற்றிலேயே முதல்முறையாக தங்கள் கிராமத்திற்கு பேருந்து சேவை கிடைத்துள்ளதால் விஷார் மற்றும் மேல்கதிர்பூர் கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இச்சேவையை வரவேற்றனர்.

இந்த வழித்தட நீட்டிப்பு மூலம் நாள்தோறும் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் பயனடைவர். அதேபோல காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முத்தியால்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் சென்று வர இது மிக உதவியாக இருக்கும்.

அரசு பேருந்தை போட்டிபோட்டு இயக்கிய அமைச்சர்கள்

விழாவின் சுவாரஸ்யமான நிகழ்வாக, பேருந்து சேவையைத் தொடங்கி வைக்க வந்த அமைச்சர்கள் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் ஆர்.வீ. இரஞ்சித்குமார் ஆகியோர் போட்டிபோட்டுக்கொண்டு அரசு பேருந்தை ஸ்டார்ட் செய்து, இயக்கிப் பார்த்து சோதனை செய்தனர். அமைச்சர்களின் இந்த எதிர்பாராத செயலைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து உற்சாகக் குரல் எழுப்பினர். பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை முழுமையாகக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இப்புதிய பேருந்து சேவைகளை பொதுமக்கள் அனைவரும் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks