திருச்செந்தூர் வரும் பக்தர்களை ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு இலவசமாக அழைத்து வர மினி பஸ் வாங்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் ரமேஷ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பக்தர்களுக்கக பேருந்து வசதி மற்றும் புதிய அன்னதானகூடம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகளை விவரமாக கீழே காணலாம்.

திருச்செந்தூரில் சிற்றுந்து, பேருந்து வசதி

* திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களைத் தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்குக் கட்டணமில்லாமல் அழைத்து வருவதற்காக,
4 சிற்றுந்துகள் (Mini Bus) ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும்.

* திருநெல்வேலி மாவட்டம், காரையார், அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மலைக்குக் கட்டணமில்லாமல் சென்று வர 2 பேருந்துகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும்.

புதிய அன்னதானக்கூடம்

* கோவை மாவட்டம், சரவணம்பட்டி, அருள்மிகு இரத்தினகிரி மருதாசலக்கடவுள் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய அன்னதானக்கூடம் கட்டப்படும்.

* வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய அன்னதானக்கூடம் கட்டப்படும்.

* வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அருள்மிகு வில்வநாதீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய அன்னதானக்கூடம் கட்டப்படும்.

கீழ்க்காணும் 9 திருக்கோயில்களில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.

1. கன்னியாகுமரி மாவட்டம். திருவட்டாறு, திற்பரப்பு, அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்.

II. வேலூர் மாவட்டம் மற்றும் வட்டம், கணியம்பாடி, அருள்மிகு கடம்பவனவாசவி அம்மன் திருக்கோயில்.

III. வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், புதுப்பேட்டை, அருள்மிகு படவேட்டு எல்லையம்மன் திருக்கோயில்.

IV. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் மற்றும் நகர். அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்.

V. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம். பூச்சிநாயக்கன்பட்டி, அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில். முத்தாலம்மன்,

VI. வேலூர் மாவட்டம் மற்றும் நகர், அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில்.

VII. திருவள்ளூர் மாவட்டம். திருநின்றவூர், அருள்மிகு இருதயாலீஸ்வரர் என்ற மணவாளீஸ்வரர் திருக்கோயில்

VIII. கிருஷ்ணகிரி காவேரிப்பட்டிணம், திருக்கோயில். மாவட்டம் மற்றும் வட்டம். அருள்மிகு அங்காளம்மன்

IX. திண்டுக்கல் மாவட்டம், மலையடிவாரம், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்.
அன்னதானக் கூடம் மேம்பாடு

கீழ்க்காணும் 3 திருக்கோயில்களில் அன்னதானக் கூடங்கள் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

1. அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர் வட்டம், கோவை மாவட்டம்.

II. அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.

III. அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் மேற்கு வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

சென்னை திருவான்மியூர். அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயிலில் அன்னதானக் கூடம் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

பிரசாதக் கூடம்

கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பிரசாதம் தயார் செய்யும் கூடம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

Source: Read Full Article