மேட்டூர் அணையை திறக்கும் முதல்வர் விஜய்?; டெல்டாவில் பாயப்போகுது தண்ணீர் - மகிழ்ச்சியில் விவசாயிகள்

மேட்டூர் அணையை திறக்கும் முதல்வர் விஜய்?; டெல்டாவில் பாயப்போகுது தண்ணீர் - மகிழ்ச்சியில் விவசாயிகள்
News Image

மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார் என்று கூறப்படும் நிலையில் காவல் உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நீர் இருப்பை பொறுத்து குறித்த நேரத்திலோ அல்லது கால தாமதமாகவோ அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லை. அணையின் நீர் இருப்பு குறைவாக இருந்தால் சுமார் 70 நாட்கள் ஆகிய நிலையிலும் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் காய்ந்து வருகிறது மேலும் டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டங்களை நடத்தி கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து 79 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியை நெருங்கி வருகிறது. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடி எட்டும் பொழுது தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டிவிடும் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி தமிழ்நாட்டுக்கு 11.66 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு பத்தாயிரம் கன அடிக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அனைத்து திறக்கப்படும். சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளிக்க நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விரைவில் நல்ல பதில் வரும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில்தான், நேற்று மாலை சேலம் மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம் மேட்டூர் அணைக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர் அணையின் பல்வேறு பகுதிகளை சென்று பார்வையிட்டார். இதில் நீர்வளத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மேட்டூர் அணையை திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 92வது ஆண்டாக காவிரி  டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் வலது கரையில் மேற்கு மண்டல ஐ.ஜி, ரம்யா பாரதி, டிஐஜி சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட எஸ் பி குத்தாலிங்கம் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் அணையின் வலது கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். இவர்கள் விழா மேடை அமையக்கூடிய இடம், மற்றும் அணை மேல் நடந்து சென்று மின்விசையை இயக்கி தண்ணீர் திறக்கும் 8- கண் மதகு பகுதியில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். பின்னர்  நீர் வளத்துறை சார்பில் அணையில் வர்ணம் பூசுதல், செடி கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணை திறக்கப்படும் என்பதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks