ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
News Image

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைச் சார்ந்த அறங்காவலர் குழுவில் திரைத்துறையைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் இடம் பெற்றது ஏன் என அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

தவெக ஆட்சியில் தொடரும் சர்ச்சை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைத்து முதலமைச்சர் விஜய் தலைமையில் அரசு செயல்பட்டு வரும் நிலையில் அரசுப் பதவிகளுக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி,ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். விஜயின் தனிப்பட்ட செயலாளராக லியோ பட இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி பதவியேற்றார். தமிழ்நாடு அரசின் திரைப்பட பயிற்சி நிறுவன தலைவராக பீஸ்ட் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அறிவிக்கப்பட்டார். அந்த வகையில் கோயில்களுக்கான அறங்காவலர் நியமன குழுவில் உறுப்பினராக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது சர்ச்சையாக வெடித்துள்ளது.

அமைச்சர் ரமேஷ் விளக்கம்

மாநில அறங்காவலர்கள் குழு ரொம்ப முக்கியமான பணியை மேற்கொள்கிறார்கள். ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருவாய் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிப்பதில் இந்த குழு முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாட்டுக்கும் இந்த குழு முக்கிய பங்காற்றுகிறது. அந்த குழுவில் 7 பேரை தேர்வு செய்திருக்கிறோம். அதில் திருமயிலம் ஆதீனம், ஓய்வுப்பெற்ற நீதிபதியை சேர்மனாக போட்டிருக்கிறோம். அதேசமயம் அர்ச்சனா கல்பாத்தியைப் பொறுத்தவரை சினிமா தயாரிப்பாளராக தான் அனைவருக்கும் தெரியும். அதனால் வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் பிரச்னை செய்கிறார்கள். எல்லாருக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது.

நடிகர், தயாரிப்பாளராக இருந்த உதயநிதி இன்று எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அதேபோல் தான் அர்ச்சனா கல்பாத்தி தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் அவர்களின் சொந்த பணத்தைக் கொண்டு திருப்பணிகள் செய்திருக்கிறார். மாமனார் ஸ்ரீனிவாசன் தனியார் குழுமத்தில் இருக்கிறார். அவர் தனது குழுமம் மூலம் பல ரூ.100 கோடிகள் செலவு செய்து கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டுள்ளார். அந்த குடும்பத்தில் திருப்பணிகள் நிறைய செய்ய எண்ணம் இருப்பதால் அதில் ஒருவரை இந்த குழுவுக்கு கொண்டு வருகிறோம்.  இவர்களைப் போல கோயில்களுக்கு பணம் செலவிட்டு திருப்பணி செய்பவர்களை கௌரவிக்க இது ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும்.

மேலும் ஆன்மிக சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ, கோயில்களில் ஆன்மிகப்பாடல் பாடக்கூடியவரான வேல்முருகன் போன்றோரும் இந்த குழுவில் இருக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றிய ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் இருக்கிறார். இப்படியான குழு   ஆன்மிகத்தையும், தமிழையும் பிரபலப்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சிகள் செய்ய திட்டமிட்டுள்ளதற்கு பக்கப்பலமாக இருப்பார்கள். மிகச்சிறப்பாக இந்த குழுவின் செயல்பாடுகள் இருக்கும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks