கண்ணீரில் நேபாளம்... காஞ்சியில் எழுந்த பிரார்த்தனை: உயிரிழந்த பக்தர்களுக்காக ஏற்றிய மோட்ச தீபம்!

கண்ணீரில் நேபாளம்... காஞ்சியில் எழுந்த பிரார்த்தனை: உயிரிழந்த பக்தர்களுக்காக ஏற்றிய மோட்ச தீபம்!
News Image

Moksha Deepam Kanchipuram: இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் தங்களது வீடுகளையும், பல ஆண்டு காலம் சிறுகச் சிறுகச் சேர்த்த சொத்துக்களையும் இழந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சோகச் செய்தி உலகெங்கிலும் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

பக்தர்களின் சோக முடிவு

இந்த வெள்ளப் பெருக்கின் பாதிப்பு நேபாள மக்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழகத்திலிருந்து ஆன்மீகப் பயணமாகவும், சுற்றுலா நோக்கத்துடனும் நேபாளத்திற்குச் சென்றிருந்த பயணிகள் பலரும் இந்த எதிர்பாராத பேரிடரில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் சிலர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்ம சாந்திக்காக ஆன்மீக பிரார்த்தனை

துயர சூழ்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதி பெறவும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் சிறப்புப் பிரார்த்தனை செய்ய முடிவு செய்யப்பட்டது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்த பேரிடரில் உயிர்துறந்த அனைவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டியும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டார்.

ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட மோட்ச தீபம்

பீடாதிபதிகளின் அருள் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காமாட்சி அம்மன் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுர நுழைவு வாயிலில் வியாழக்கிழமையன்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஏற்றப்பட்ட இந்த தீபத்தின் மூலம், உயிரிழந்த பக்தர்களின் மற்றும் பொதுமக்களின் ஆத்மா இறைவனின் திருவடிகளைடையவும், துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் கிடைக்கவும் காஞ்சி காமாட்சி அம்மனின் பாதங்களில் ஏக மனதாகப் பிரார்த்திக்கப்பட்டது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks