இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் வரும் பயணிகளுக்காக கடந்த இரண்டு வருடங்களாக ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வரவேற்பை வைத்து தென்னக ரயில்வே மாதந்தோறும் நீட்டிப்பு செய்து வருகிறது. இதில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர ரயில் சேவை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, வண்டி எண் (07355) ஆகஸ்ட் 02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ஹூப்ளியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும்.மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமை நாளில் 03, 10, 17, 24, 31 இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article