சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!

சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
News Image

உண்மை சரிபார்ப்பு பணியை முடிக்காவிட்டால், வீட்டு சமையல் கேஸ் சிலிண்டரை தொடர்ந்து முன்பதிவு செய்ய முடியாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகுதியான பயனாளிகளுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்ய, காஸ் சிலிண்டர் பயனாளியின் உண்மைத்தன்மையை சரிபார்க்க எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உண்மை தன்மை சரிபார்ப்பு முறை

இதற்காக, குடும்பத்தில் சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் தனக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் காஸ் ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகை பதிவு செய்து 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் 2.40 கோடி வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்களில், 15 சதவீதம் பேர் உண்மை சரிபார்ப்பு பணியை முடிக்காமல் உள்ளனர். அவர்கள் அந்த பணியை வரும் 16ம் தேதிக்குள் முடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்

இந்நிலையில், "உண்மை சரிபார்ப்பு பணியை வரும் 16ம் தேதிக்குள் முடிக்கவில்லை எனில், சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது; வணிக சிலிண்டர் விலையில் வீட்டு சிலிண்டர் கிடைக்கும்" என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இது வாடிக்கையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் மற்றும் எஸ்.எம்.எஸ். அறிவிப்பு

இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், "ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் காஸ் இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கு, வீட்டு கட்டணத்தில் சிலிண்டர் பெற, உண்மை சரிபார்ப்பு பணியை முடித்திருக்க வேண்டும். வரும் 16ம் தேதிக்குள் செய்ய தவறினால், வீட்டு கட்டணத்தில் சிலிண்டர் பெற தகுதியற்றவர்களாகி விடுவீர்கள். விரைவில் அந்த பணியை முடிக்கவும்" என எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுவதாக அவர்கள் கூறினர்.

அதிகாரிகளின் விளக்கம்

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உண்மை சரிபார்ப்பு பணி செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால், அந்த பணியை முடிக்கவில்லை எனில் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது, வணிக சிலிண்டர் விலையில் வாங்க வேண்டியிருக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks