வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்

கொரோனா பாதிப்பால் உலகமே பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், தற்போது தான் அதில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் மீண்டு வரும் நிலையில், மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறுது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, H1N1 வகையைச் சேர்ந்த பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

பன்றிக்காய்ச்சல் அறிகுறி என்ன.?

குறிப்பாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாகும். இது மட்டுமில்லாமல் சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எந்தவொரு மருந்தகங்களிலும் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்செலுத்தும் சுய மருத்துவத்தைத் (Self-medication) கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய மருத்துவ பரிசோதனை - பொது சுகாதாரத்துறை உத்தரவு

பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகி, உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமே பன்றிக்காய்ச்சில் தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்று பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Source: Read Full Article