ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
News Image

பெண்களுக்கான கடன் உதவி திட்டங்கள்

பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சுயமாக முன்னேற்ற வேண்டும் என்பதற்காக மானிய கடன் உதவி திட்டம், சுய வேலைவாய்ப்பு உதவி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

"வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்"

இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக "வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி, கடன் பங்களிப்பு தொகையில் சலுகை மற்றும் பிணையச் சொத்து வழங்குதலில் சலுகை ஆகிய உதவிகளுடன் மகளிர் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற வழி வகை செய்யப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும். 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் பயன்பெறுவர்.

வட்டி விகிதம் தளர்வு

தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள மகளிர் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் நடப்பு நிதியாண்டில் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் "வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" மூலம் மகளிர் தொழில்முனைவோருக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, தொழில்முனைவோரின் பங்களிப்பு 35 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், பிணையச் சொத்து 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் மற்றும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.20 சதவீதத்திலிருந்து 9.95 சதவீதமாகவும் தளர்வு செய்யப்பட்டு, எளிய முறையில் தொழில்முனைவோர்களுக்கு மகளிர் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டில், "வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்" மூலம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் 5.500 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்படும். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்களால் நிர்வகிக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதோடு, 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொழிற் பூங்கா

இது மட்டுமில்லாமல் நாமக்கல் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் லத்துவாடி பகுதியில், சுமார் 245 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும், விழுப்புரம் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஓமந்தூர் பகுதியில் சுமார் 229 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks