பழனிகோவில் பத்திரப்பதிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையிலிருந்த போது வழக்கறிஞர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு - கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர் தீன் மதுரை மத்திய சிறையில் இருந்தபோது நேற்றிரவு திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலயே உயிரிழந்தார். இதையடுத்து அன்வர்தீனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரை கரிமேடு காவல்துறையினர் அன்வர்தீனின் இறப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மத்திய சிறையிலும் விசாரணை நடத்தினார்

இந்நிலையில் சிறையில் இருந்த அன்வர் தீனின் மரணம் குறித்து மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அன்வருதீனின் உடலை நேரில் பார்த்து விசாரணை நடத்தியதோடு குடும்பத்தினரிடமும் மதுரை மத்திய சிறையிலும் விசாரணை நடத்தினார். இதையடுத்து நீதிபதி ராஜபிரபு முன்பாக மதுரை, திண்டுக்கல், விருதுநகரை சேர்ந்த மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் உடற்கூராய்வு நடைபெற்றது. இதையடுத்து உடற்கூராய்வு முடிவடைந்த நிலையில் அன்வர்தீனின் உடலானது, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அன்வர் தீனின் உடலானது ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

Source: Read Full Article