மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்

மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
News Image

" மேற்படிப்பு படிக்க விருப்பம் இல்லை "

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்தவர் திருமால் ( வயது 63 ) இவர் முட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி , திருமணமான ஒரு மகள் மற்றும் 26 வயதுடைய ஜினேஷ் மூர்த்தி என்ற மகன் உள்ளார்.

பி.இ. பட்டப் படிப்பை முடித்த ஜினேஷ் மூர்த்தி , தனது தந்தையுடன் இணைந்து குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் , அவர் மேற்படிப்பு தொடர வேண்டும் என பெற்றோர் விருப்பம் தெரிவித்ததாகவும் , ஆனால் அதில் ஜினேஷ் மூர்த்திக்கு விருப்பம் இல்லாததால் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது அறைக்குச் சென்று உறங்கிய ஜினேஷ் மூர்த்தி  காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளனர்.

" எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை "

அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன்  அவரை உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் , அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜினேஷ் மூர்த்தியின் தந்தை திருமால் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் போது , ஜினேஷ் மூர்த்தி கைப்பட எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், "எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை " பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மை மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அஞ்சுகிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks