மன்றத்திற்கு புதிய கொடி, ரசிகர்களுடன் சந்திப்பு என திரைத்துறையில் இருந்து அடுத்த அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருகிறார் நடிகர் தனுஷ். இன்று கூட திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து தன்னுடைய அரசியல் அறிவிப்புக்கும் நாள் குறித்திருப்பதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

புதிய கட்சியா? பாஜகவா?

ஆன்மீக அரசியல் என கூறி நடிகர் ரஜினி அரசியல் கட்சித் தொடங்க திட்டமிட்டு, அது நடைபெறாமல் போன நிலையில், அவர் விட்ட இடத்தை ரஜினியின் ஆசியோடு தொடர தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக தன்னுடைய ரசிகர் மன்றத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் தனுஷ், விரைவில் அரசியல் அறிவிப்பை வெளியிட ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அதே நேரத்தில் தனிக் கட்சித் தொடங்கி விஜய், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாற்றாக இன்னொரு அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டில் உடனடியாக உண்டு செய்ய முடியுமா? என்ற சந்தேகமும் தனுஷ்க்கு இருப்பதால், புதிய கட்சித் தொடங்குவதற்கு பதில் பாஜகவில் இணைந்து, தேர்தல் அரசியலை செய்யலமா? எனவும் அவர் தன்னுடைய நெருக்கமான வட்டாரத்தில் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தனுசை அழைக்கும் பாஜக – முடிவு என்ன ?

அதே நேரத்தில், பாஜக தலைமையும் தனுஷ் அந்த கட்சியில் இணைவதை விரும்புவதாகவும் இது தொடர்பாக தனுஷ் தரப்பிடம் பாஜக தேசிய தலைமையில் இருந்து முக்கிய நபர் ஒருவர் பேசிவருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள பிரபல கணக்காளர் ஒருவர் தனுஷ்க்கு ஆலோசனை வழங்கத் தொடங்கியிருப்பதாகவும் அவரின் வழிகாட்டுதல்படியே தனுஷின் அரசியல் பிரவேசம் இருக்கப்போவதாகவும் தெரிகிறது.

தனிக் கட்சி தொடங்குவதற்கு பதில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அடித்தளமாக இருந்த பாஜகவிலேயே இணைந்து, விஜய்க்கு எதிரான அரசியலை தமிழ்நாட்டில் முன்னெடுக்க தனுஷ் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்க்கு எதிராக தனுஷ்

பாஜக-வை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தி விஜய் தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடித்திருக்கும் நிலையில், தனுசை பாஜகவில் இணைத்து, விஜய்க்கு எதிராக களமிறக்க பாஜக தலைமையும் தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. புதுக் கட்சியா அல்லது பாஜகவா? என்பதை விரைவில் தனுஷ் அறிவிக்கவுள்ளார்.

Source: Read Full Article