Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
News Image

Aavin Milk Price: பால் விலை கொள்முதல் விலை லிட்டருக்கு இனி 41 ரூபாயாக உயர்த்தப்படுவதாக,  சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நடவடிக்கைகள் தொடங்கியதுமே, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது, “தற்போது 4.3 சதவிகிதம் கொழுப்பு சத்து மற்றும் 8.2 சதவிகிதம் இதர சத்து அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்கத்தொகையாக ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் என ஒரு லிட்டருக்கு 38 ரூபாயும் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பு, அதிகரித்து வரும் செலவுகளை கடந்த கால அரசு கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது. கடந்த காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், கடுமையான நிதி சுமைக்கு மத்தியிலும் நமது அரசு பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது உழைப்பிற்கு மரியாதை வழங்க முடிவு செய்துள்ளோம். கொள்முதல் விலையை உயர்த்துவது நமது கடமை என்பதால், பால் கொள்முதல் விலையை கூட்டுறவு சங்கங்கள் மூலம் லிட்டருக்கு ஒரு ரூபாயும், அரசு ஊக்கத்தொகை 3 ருபாயிலிருந்து ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. மொத்தமாக ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசுக்கு மாதம் சுமார் 30 கோடி ரூபாயும், ஆண்டுக்கு சுமார் 360 கோடி ரூபாயும் கூடுதல் செலவாகும்” என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks