மேகங்களை பார்த்தாலே மாதம் ரூ.8.5 லட்சம்! 23 வயது இளைஞருக்கு கிடைத்த ‘ட்ரீம் ஜாப்’.. வேலை என்ன தெரியுமா?

மேகங்களை பார்த்தாலே மாதம் ரூ.8.5 லட்சம்! 23 வயது இளைஞருக்கு கிடைத்த ‘ட்ரீம் ஜாப்’.. வேலை என்ன தெரியுமா?
News Image

மலை உச்சியில் அமர்ந்து மேகங்களையும் பனிமூட்டத்தையும் ரசித்தபடியே மாதம் ரூ.8.5 லட்சம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? சீனாவில் 23 வயது இளைஞர் ஒருவருக்கு இப்படியொரு வித்தியாசமான வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. வழக்கமான அலுவலகப் பணிக்கு முற்றிலும் மாறாக, மலைப்பகுதியில் தங்கி மேகங்கள், பனிமூட்டம் மற்றும் இயற்கைக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்வதுதான் அவரது பணி. இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

மாதம் ரூ.8.5 லட்சம் கொடுத்த ‘கிளவுட்ஸ்கேப் அப்சர்வர்’ வேலை

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பிரபலமான லாவோஜுன் மலை சுற்றுலாத் தலம், கடந்த ஜூலை 8-ம் தேதி ‘Cloudscape Observer’ எனப்படும் புதிய பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. தேர்வு செய்யப்படும் நபர் ஒரு மாத காலம் மலையில் தங்கி, அங்கு மாறிக்கொண்டிருக்கும் மேகங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து, தினமும் அந்த வீடியோக்களை வெளியிட வேண்டும் என்பதே பணியின் முக்கிய நோக்கம்.

இதற்காக அந்த நபருக்கு ஒரு மாதத்திற்கு 60,000 சீன யுவான் வழங்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.8.5 லட்சமாகும். அதுமட்டுமின்றி, பணிக்காலம் முழுவதும் தங்குமிட வசதியும் வழங்கப்பட்டது. இந்த வித்தியாசமான வேலை அறிவிப்பு வெளியானதும் சீனாவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஒரு வாரத்திற்குள் 3,500-க்கும் மேற்பட்டோர் இந்த வேலைக்கு விண்ணப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 வயது இளைஞர் எப்படி தேர்வானார்?

இந்த ‘ட்ரீம் ஜாப்’ வாய்ப்பை பெற்றவர் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 23 வயதான லி சிச்சென். சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், இ-காமர்ஸ் துறையில் பட்டம் பெற்றவர். இந்த பணிக்கான விண்ணப்பதாரர்களிடம் குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி வீடியோக்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

வீடியோவின் தரம் மட்டுமின்றி, அந்த வீடியோவுக்கு கிடைத்த பார்வையாளர்களின் வரவேற்பு மற்றும் ஈடுபாடு உள்ளிட்ட அம்சங்களும் தேர்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. லி சிச்சென் சமர்ப்பித்த விண்ணப்ப வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட பல போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி அவர் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் லாவோஜுன் மலையின் முதல் ‘Cloudscape Observer’ ஆக அவர் பொறுப்பேற்றார்.

அதிகாலை 5 மணிக்கே தொடங்கும் வேலை

மேகங்களை பார்த்துக்கொண்டே இருப்பது மிகவும் எளிதான வேலை போல தோன்றலாம். ஆனால் லி சிச்செனின் அனுபவம் அப்படியில்லை. அவரது வேலை அதிகாலை 5 மணிக்கே தொடங்கிவிடும். சூரிய உதயத்திற்கு முன்பே கேமராவுடன் தயாராகி, வெவ்வேறு கோணங்களில் இயற்கைக் காட்சிகளை பதிவு செய்யத் தொடங்குவார். சூரியன் மறைந்த பிறகும் அவரது படப்பிடிப்பு தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

மேகங்கள், பனிமூட்டம், மலைக்காட்சிகள் மற்றும் இயற்கையில் உருவாகும் ஒளி மாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து பதிவு செய்வதே அவரது முக்கியப் பணியாக இருந்தது. சுற்றுலாத் தலத்தின் ஆன்லைன் உள்ளடக்கத்தை அதிகரிப்பதற்காக இந்த வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டன.

கேமரா மட்டுமல்ல.. ட்ரோன், எடிட்டிங் என புதிய திறன்கள்

இந்த ஒரு மாத பணிக்காலம் லி சிச்செனுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாக மட்டுமல்லாமல், பல புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் அனுபவமாகவும் அமைந்தது. வீடியோ படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங், கலர் கிரேடிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை அவர் மேம்படுத்திக்கொண்டார். அதோடு ட்ரோனை இயக்குவதிலும் அனுபவம் பெற்றார்.

தனது தினசரி பணியையும், மலைப்பகுதியில் சந்தித்த அனுபவங்களையும் அவர் தனிப்பட்ட வ்லாக் வீடியோக்களாக வெளியிட்டார். இதனால் சுற்றுலாத் தலத்திற்கான உள்ளடக்கத்தை உருவாக்கியதுடன், தனது சொந்த ஆன்லைன் இருப்பையும் அவர் வளர்த்துக்கொண்டார்.

மேகங்களை படம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல!

இந்த வேலையின் சவால்களும் லி சிச்செனுக்கு இருந்தன. மேகங்களை நம் விருப்பப்படி உருவாக்கவோ நகர்த்தவோ முடியாது. குறிப்பிட்ட ஒரு காட்சியை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தாலும், வானிலை அதற்கு ஒத்துழைக்காத நேரங்களில் அந்தக் காட்சியே கிடைக்காமல் போய்விடும்.

மேலும், தனது வீடியோக்கள் இணையத்தில் எவ்வாறு வரவேற்கப்படும் என்ற அழுத்தமும் அவருக்கு இருந்தது. ஏற்கனவே விண்ணப்ப வீடியோவின் வரவேற்புதான் இந்த வேலையை பெற்றுத் தந்ததால், தொடர்ந்து பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டிய சூழல் இருந்தது. இயற்கையை நம்பியே வேலை செய்ய வேண்டியிருந்ததால், சில நேரங்களில் வானிலை நிலைமை அவருக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த மலை தற்போது சீனாவின் உயர்ந்த சுற்றுலாத் தள தரவரிசையான 5A பிரிவில் இடம்பெற்றுள்ளது. இயற்கை அழகையும் சமூக வலைதள உள்ளடக்க உருவாக்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த வித்தியாசமான வேலை, எதிர்காலத்தில் சுற்றுலாத் துறையில் புதிய வகையான வேலை வாய்ப்புகளுக்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks