கிலோ ரூ.75-ஐ தொட்ட சர்க்கரை... அதிர்ச்சியில் உறைந்துள்ள  தஞ்சை மக்கள்

கிலோ ரூ.75-ஐ தொட்ட சர்க்கரை... அதிர்ச்சியில் உறைந்துள்ள  தஞ்சை மக்கள்
News Image

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான சர்க்கரையின் விலை கடந்த சில நாட்களில் திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளது. கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை தற்போது ரூ.ரூ.70  முதல் ரூ.75 வரைவிற்பனை செய்யப்படுகிறது. தரமான சர்க்கரை வகைகள் கிலோ ரூ.80 வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி தேநீர் கடை உரிமையாளர்கள், இனிப்பு தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென உயர்ந்த சர்க்கரை விலை

தஞ்சையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சர்க்கரை ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதன் விலை திடீரென அதிகரித்து ரூ.55 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது சாதாரண வகை சர்க்கரையின் விலை மட்டுமே என்றும், தரமான சர்க்கரை வகைகள் கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரையைப் போலவே வெல்லத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட வெல்லம் தற்போது ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுச் சர்க்கரையின் விலையும் கிலோ ரூ.55-ல் இருந்து ரூ.70 வரை அதிகரித்துள்ளது.

உற்பத்தி குறைவு உட்பட பல்வேறு காரணங்கள்

நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைவு, பருவநிலை பாதிப்பு, பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் தேவை, உலகளாவிய சந்தையில் நிலவும் பற்றாக்குறை மற்றும் பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் குடும்பச் செலவுகளை சமாளிக்க சிரமப்பட்டு வரும் நிலையில், தற்போது சர்க்கரை விலையும் பல மடங்கு உயர்ந்திருப்பது குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் தேநீர், காபி முதல் குழந்தைகளுக்கான இனிப்பு வகைகள் வரை சர்க்கரை முக்கியப் பொருளாக உள்ளது. இதனால் சர்க்கரை விலை உயர்வு நேரடியாக குடும்பங்களின் சமையல் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேநீர் கடைகளுக்கு கூடுதல் சுமை

சர்க்கரை விலை உயர்வு தேநீர் கடை உரிமையாளர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேநீர் மற்றும் காபி தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது சர்க்கரையின் விலையும் அதிகரித்திருப்பதால் ஒரு கப் தேநீர் தயாரிப்பதற்கான செலவு மேலும் உயர்ந்துள்ளதாக தேநீர் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தேநீர் கடை உரிமையாளர்கள் கூறுகையில், “ஏற்கனவே சிலிண்டர் மற்றும் பால் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது சர்க்கரை விலையும் அதிகரித்துள்ளதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. விற்பனை விலையை உடனடியாக உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். உயர்த்தாமல் இருந்தால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே சர்க்கரை விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என்றனர்.

இனிப்பு தயாரிப்பாளர்கள் கவலை

பண்டிகை காலங்கள் தொடர்ந்து வர உள்ள நிலையில் சர்க்கரை விலை உயர்வு இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான இனிப்பு வகைகள் தயாரிப்பில் சர்க்கரை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரையின் விலை திடீரென அதிகரிப்பதால், இனிப்பு தயாரிப்புக்கான மூலப்பொருள் செலவும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஸ்வீட்ஸ் தயாரிப்பாளர்கள் கூறுகையில், “தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இனிப்பு வகைகளுக்கான தேவை அதிகரிக்கும். இந்த நேரத்தில் சர்க்கரை விலை உயர்ந்திருப்பது எங்களது தொழிலை நேரடியாக பாதிக்கிறது. உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சர்க்கரை விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

“சர்க்கரை விலையை கட்டுப்படுத்த வேண்டும்”

பொதுமக்கள் கூறுகையில், “வீடுகளில் தினசரி தேநீர், காபி தயாரிப்பது முதல் இனிப்பு வகைகள் செய்வது வரை சர்க்கரை அத்தியாவசியமாக உள்ளது. கடந்த சில நாட்களிலேயே சர்க்கரை விலை கணிசமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் குடும்பச் செலவை சமாளிக்க சிரமப்பட்டு வருகிறோம். தற்போது சர்க்கரை விலையும் உயர்ந்துள்ளதால் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது” என்றனர்.

தொடர்ந்து பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் சர்க்கரைக்கான தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விலை இன்னும் உயர்ந்து விடுமோ என்ற அச்சமும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே, சர்க்கரை விலை உயர்வுக்கான காரணங்களை அரசு ஆய்வு செய்து, பதுக்கல் மற்றும் செயற்கை விலை உயர்வை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், தேநீர் கடை உரிமையாளர்கள், இனிப்பு தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு சர்க்கரை விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தஞ்சை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks