இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
News Image

விழுப்புரம் : திண்டிவனம் அருகே பேராசிரியையிடம் இன்ஸ்டாகிராமில் காதலிப்பதாக நாடகமாடி தனது  நண்பர்களை வைத்தே திட்டமிட்டு ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்த காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்ஸ்டாகிராம் பழக்கமும் பணப் பறிப்பும்

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலிப்பதாக நாடகமாடி, கல்லூரி பேராசிரியையிடம் திட்டமிட்டு ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனைப் பறித்த திருமணமான நபர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தனியார் கல்லூரி பேராசிரியைகும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழரசன், பேராசிரியையிடம் தனது தேவைக்கெனக் கூறி சிறுகச் சிறுக சுமார் 50,000 வரை பணம் வாங்கியுள்ளார்.

சதித் திட்டமும் அரங்கேற்றமும்

இதனிடையே, தமிழரசனின் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம் தெரியவந்ததால், ஆத்திரமடைந்த அவரது மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தான் மனவேதனையில் இருப்பதாக அந்த பேராசிரியையிடம் தமிழரசன் கூறியுள்ளார்.

மேலும், இன்ஸ்டாகிராம் வீடியோ காலின் போது பேராசிரியையின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியைப் பார்த்த தமிழரசனுக்கு, அதை எப்படியாவது பறிக்க வேண்டும் என்ற எண்ணம் தோண்டியுள்ளது.

இதற்காகத் தனது நண்பர்களான செய்யாறைச் சேர்ந்த அருண்குமார் (34), ராஜேஷ் (31), மற்றும் சுந்தர் (42) ஆகியோருடன் இணைந்து ஒரு சதித் திட்டத்தைத் தீட்டினார். திட்டத்தின்படி, பேராசிரியையை நேரில் சந்திப்பதற்காக வந்தவாசியை അടുത്ത புலிவாய் கிராமக் கூட்டுச்சாலை அருகே வருமாறு வரவழைத்துள்ளார்.

மிரட்டிப் பறித்த நண்பர்கள் - திடுக்கிடும் நாடகம்

பேராசிரியை அங்கு வந்து தமிழரசனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, முன்கூட்டியே திட்டமிட்டபடி தமிழரசனின் நண்பர்கள் 3 பேர் அங்கு வந்து இருவரையும் மிரட்டியுள்ளனர். நாடகத்தை நம்ப வைப்பதற்காகத் தமிழரசனையும் அவர்கள் தாக்குவது போல் நடித்துள்ளனர். பின்னர், பேராசிரியையின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி மற்றும் அவரது செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

சிசிடிவி காட்சிகளால் வெளிவந்த உண்மை

தமிழரசனின் சதித்திட்டம் அறியாத பேராசிரியை, அவரையே அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்துள்ளார்.

வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், பேராசிரியையைச் சந்திப்பதற்கு முன்பாகவே தமிழரசன் தனது 3 நண்பர்களுடன் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து, சம்பவத்திற்கான இடத்தை தேர்வு செய்தது பட்டவர்த்தனமாகத் தெரியவந்தது.

4 பேர் கைது - பொருட்கள் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து, தமிழரசனிடம் காவல்துறையினர் பாணியில் தீவிர விசாரணை நடத்தியபோது, நண்பர்களுடன் சேர்ந்து நாடகமாடி நகை மற்றும் செல்போனைப் பறித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, தமிழரசன் மற்றும் அவரது நண்பர்களான அருண்குமார், ராஜேஷ், சுந்தர் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 சவரன் தங்க நகை, 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks