காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றால், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவித்துள்ளார்.

முதல் கட்ட கணக்கெடுப்பு பணிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற் கட்ட பணியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இப்பணியில் 1,736 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 275 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று, வீடு தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கோரிக்கை

கணக்கெடுப்பு பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்போது கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் முழுமையாகவும் துல்லியமாகவும் தெரிவித்து, கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முதற்கட்ட வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி வரும் ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் விடுப்பட்ட வீடுகள் எதுவும் இல்லாத வகையில் கணக்கெடுப்பு பணியை மேற்கோள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

கட்டுப்பாட்டு அறை எண்

தங்களது பகுதியில் கணக்கெடுப்பு பணியாளர் வரவில்லை எனில், பொதுமக்கள் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044 - 2723 7107 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article