தமிழக அளவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 2-ம் இடம்: ஆணையர் பெருமிதம்

தமிழக அளவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 2-ம் இடம்: ஆணையர் பெருமிதம்
News Image

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், தஞ்சாவூர் மாநகராட்சி 70 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் வெ.தீபனாவிஸ்வேஸ்வரி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 24 மாநகராட்சிகளின் செயல்பாடுகள், நகர்ப்புற நிர்வாகத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டில் குடிநீர் மற்றும் புதைசாக்கடை பராமரிப்பு, ஆற்றல் திறன், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வசதிகள், பொது சுகாதாரம், பொதுமக்கள் பங்கேற்பு, நகர்ப்புற திட்டமிடல், மின்னாளுமை, பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கைகள், திறன் மேம்பாடு மற்றும் புதுமைப்படுத்தல் உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் தஞ்சாவூர் மாநகராட்சி ஒட்டுமொத்தமாக 70 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று தமிழக அளவில் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் மாநகராட்சியின் சிறப்பான நிர்வாகத்துக்கும், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த பணிக்கும் கிடைத்துள்ள முக்கியமான பாராட்டாகும்.

தஞ்சாவூர் மாநகரில் தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள் பொது இடங்களில் கொட்டுவதைத் தடுக்கும் வகையில், தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். வணிக நிறுவனங்களில் இரவு நேரங்களிலும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கும் தேவையை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜெபமாலைபுரம் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பைகள் தரம் பிரித்தல் தொடர்பாக விஜிலென்ஸ் வழக்குகள் நடைபெற்று வருவதால், அங்கு குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக மாநகராட்சிக்கு உட்பட்ட 263 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கும் குப்பைகள் உரம் தயாரிப்பதற்காகவும், மக்காத குப்பைகள் சிமெண்ட் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அருகிலுள்ள கிராமப்புற பகுதிகளில் கொட்டப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, அதில் தொடர்புடையதாகக் கூறப்படும் 2 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகரின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாநகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சி சார்பில் ரத்த வங்கி மற்றும் முதல்வர் படைப்பகம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெறும் வகையிலும், நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநகரில் விளம்பரத் தட்டிகள் வைப்பதற்கும் உரிய அனுமதி பெறுவது கட்டாயமாகும். அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரத் தட்டிகள் அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகரின் அழகை பாதுகாப்பதற்கும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் விளம்பரத் தட்டிகள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், மாநகரை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நகரின் அடிப்படை கட்டமைப்பு, தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

அப்போது, மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி உடனிருந்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks