எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு

எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
News Image

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.  ரயில் பயணிகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளால், ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சில இமு (EMU) ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.சென்னையில் இரவு நேர புறநகர் ரயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால், ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சில இமு (EMU) ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

குறிப்பாக கடற்கரை–தாம்பரம் வழித்தடத்தில் பயணிப்பவர்கள் முன்கூட்டியே பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரும்பு நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக, பாதுகாப்பு மற்றும் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து இரவு 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்கு தாம்பரம் நோக்கி இயக்கப்படும் இமு ரயில்கள் பாதிக்கப்படுகின்றன. வாரத்தின் மற்ற நாட்களில் 3 இமு ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 5 இமு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, சில இரவு நேர புறநகர் ரயில்கள் முழு வழித்தடத்தில் செல்லாமல், சென்னை கடற்கரை–தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை–கூடுவாஞ்சேரி வரை மட்டுமே பகுதியளவில் இயக்கப்படும்.

மேலும், எழும்பூர் நிலையப் பணிகளின் காரணமாக சில விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படுவதற்கும், இரண்டு விரைவு ரயில்களின் வழித்தடங்கள் தற்காலிகமாக மாற்றப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது ரயில் சேவை விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்து, தேவையெனில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் புறநகர் ரயில்களை பயன்படுத்துவோர் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks