ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!

ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
News Image

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ’முதலமைச்சர் கோப்பை – 2026’ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள்,  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன் குமார்,  தெரிவித்துள்ளார். இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

விளையாட்டுத்துறை ஊக்கம் மற்றும் நோக்கங்கள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியானது, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் விளையாட்டுச் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடச் செய்யும் ஒரு மாபெரும் முயற்சியாகும். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மறைந்திருக்கும் திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய மேடையமைத்துத் தந்து, தகுந்த அங்கீகாரமும் ஊக்கத்தொகையும் பரிசுகளும் வழங்கி கௌரவிப்பதே இப்போட்டிகளின் முதன்மை நோக்கமாகும்.

செப்டம்பர் 4 முதல் போட்டிகள் தொடக்கம்

பொதுமக்களிடையேயும் மாணவ, மாணவிகளிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் மாவட்ட அளவில் கோலாகலமாகத் தொடங்கப்படவுள்ளன.

45 வகையான விளையாட்டுப் போட்டிகள்

கடந்த ஆண்டு மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. நடப்பு 2026 ஆம் ஆண்டில் விளையாட்டு வீரர்களின் திறனை மேலும் வெளிக்கொண்டு வரும் வகையில் வில்வித்தை, வூஷு (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர் விளையாட்டுகளான காயக்கிங் (Kayaking), கேனோயிங் (Canoeing) ஆகிய புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளன.

பங்கேற்பதற்கான தகுதிகள் மற்றும் வயது வரம்பு

இப்போட்டிகள் ஐந்து முதன்மைப் பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றன.

1. பள்ளி மாணவர்கள்: 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்).

2. கல்லூரி மாணவர்கள்: இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்).

3. பொதுப் பிரிவினர்: 15 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.

4. மாற்றுத் திறனாளிகள்: அனைத்து வயதுடைய மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கலாம்.

5. அரசு ஊழியர்கள்: அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களும் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

பரிசுத் தொகை விவரங்கள்:

மாவட்ட மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு:
* முதல் பரிசு: ₹3,000
* இரண்டாம் பரிசு: ₹2,000
* மூன்றாம் பரிசு: ₹1,000

மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு,
* முதல் பரிசு: ₹1,00,000
* இரண்டாம் பரிசு: ₹75,000
* மூன்றாம் பரிசு: ₹50,000

மாநில அளவில் குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு:
* முதல் பரிசு: ₹75,000
* இரண்டாம் பரிசு: ₹50,000
* மூன்றாம் பரிசு: ₹25,000

இணையதளப் பதிவு மற்றும் கூடுதல் விவரங்கள்

இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 06.08.2026 முதல் 31.08.2026 வரை https://sdat.tn.gov.in  https://tncmtrophy.sdat.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் தனிநபராகவோ அல்லது தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலமாகவோ பதிவுகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை கைபேசி எண்: 7401703497 மற்றும் அலுவலக தொலைபேசி எண்: 04365-253059 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் இணையதளத்தில் பதிவு செய்து இப்போட்டிகளில் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன் குமார்,  கேட்டுக்கொண்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks