Flipkart’s Mega Tamil Nadu Expansion: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான 'பிளிப்கார்ட்', தமிழக அரசுடனான தனது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாநிலத்தில் டிஜிட்டல் வர்த்தகம், தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் பொருட்கள் விநியோகத் தொடர் செயல்பாடுகளை பெருமளவில் விரிவுபடுத்தி வருவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த நவீனக் கட்டமைப்பு விரிவாக்கங்கள் மூலம் உள்ளூர் தொழில் முனைவோரும், வணிகர்களும் பெரும் பயனைடைந்து வருகின்றனர்.

70,000 விற்பனையாளர்கள் பயன்பெறும் வர்த்தகத் தளம்

தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 70,000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பிளிப்கார்ட் தளத்தைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடைகின்றனர். குறிப்பாக, திருப்பூரின் பின்னலாடை நிறுவனங்கள், ஈரோடு மற்றும் சேலத்தின் ஜவுளி நிறுவனங்கள், காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் மற்றும் தஞ்சாவூர் கைவினைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய தொழில் சார்ந்த உற்பத்தியாளர்களும் இந்த ஆன்லைன் தளத்தின் மூலம் தங்களின் சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தியுள்ளனர்.

வேலைவாய்ப்பும் பிரம்மாண்ட உள்கட்டமைப்பும்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்தச் விரிவான செயல்பாடுகளின் காரணமாக, தமிழகத்தில் இதுவரை 1.30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. மேலும், மாநிலத்தில் அந்நிறுவனத்தின் விநியோகத் தொடர் கட்டமைப்பு 25 லட்சம் சதுர அடிக்கும் மேல் பிரம்மாண்டமாக விரிவடைந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள டேட்டா சென்டர் (Data Center), பிளிப்கார்ட் நிறுவனத்தின் மிகப்பரிய தொழில்நுட்பக் கட்டமைப்பு முதலீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

Source: Read Full Article