இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
News Image

உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களுக்கும் இயற்கை விரும்பிகளுக்கும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரு மறக்க முடியாத நாளாக அமையவுள்ளது. ஏனெனில், 24 மணி நேர கால இடைவெளியில் நான்கு வெவ்வேறான அரிதான வானியல் நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழவுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நேரங்களில் நிகழ்ந்தாலும், இந்த நான்கு நிகழ்வுகளும் ஒரே நாளில் இணைந்து வருவது வானியல் வரலாற்றில் மிகவும் அபூர்வமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

விடியற்காலையில் ஆறு கோள்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு

ஆகஸ்ட் 12 அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக, விண்வெளியில் ஒரு அபூர்வ காட்சி அரங்கேறவுள்ளது. வியாழன், புதன், செவ்வாய், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் வானில் கிழக்கு முதல் மேற்கு வரை ஒரே நேர்கோட்டில் வரிசையாகக் காட்சியளிக்கும் கோள்களின் அணிவகுப்பு நிகழவுள்ளது. இந்த வரிசையில் செவ்வாய் மற்றும் சனி கோள்களைப் பொதுமக்கள் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும் என்றும், தொலைவில் உள்ள யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களைத் தொலைநோக்கி மூலம் தெளிவாகக் காண முடியும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பகலை இரவாக்கும் பூரண சூரிய கிரகணம்

இன்று பகல் நேரத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சரியாகக் கடந்து செல்லும் பூர்ண சூரிய கிரகணம் நிகழவுள்ளது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பகல் நேரமே இருண்டு இரவாக மாறும் அளவுக்கு இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இருப்பினும், இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 9:45 மணி முதல் அதிகாலை 2:15 மணி வரை நிகழ்வதாலும், அக்காலத்தில் சூரியன் நமது பகுதி அடிவானத்திற்கு கீழே இருப்பதாலும் இந்தியாவில் இதனைப் பார்க்க முடியாது.

பெர்சீட் விண்கல் மழைக்கு வழிவகுக்கும் இருண்ட அமாவாசை

சூரிய கிரகணம் நிகழும் அதே நாளில் நிலவு தனது முழுமையான அமாவாசை கட்டத்தை எட்டுவதால், இரவு வானம் முற்றிலும் ஒளி இன்றி இருண்டு காணப்படும். இந்த இருண்ட சூழல், ஆண்டின் மிகச் சிறந்த விண்வெளி நிகழ்வான பெர்சீட் விண்கல் மழைக்கு மிகச் சிறந்த பின்னணியை அமைத்துக் கொடுக்கிறது. நிலவொளி தொந்தரவு இல்லாததால், ஆகஸ்ட் 12 முதல் 14 ஆம் தேதி வரையிலான அதிகாலை வேளையில் மணிக்கு நூறு விண்கற்கள் வரை எரியும் அற்புதக் காட்சியை விண்வெளி ஆர்வலர்கள் மிகத் தெளிவாகக் கண்டு ரசிக்கலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks