ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..

ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
News Image

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு சில மாற்றங்களை அரசு அறிவிக்கும். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்படவிருகிறது. எல்பிஜி சிலிண்டர் முதல் மானியம் வரை பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன. இதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அப்படி இந்த மாதத்தில் என்னென்ன புதிய விதிகள் வரவிருக்கிறது? என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இனி எளிதில் எல்பிஜி கேஸ் இணைப்பை பெறலாம். அதற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் "பாரத் லைட் ஜிப்" என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த சேவை மும்பையில் அறிமுகமாகிறது. 15-ஆம் தேதிக்குள் 24 மாநிலங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் மூலம் புதிய கேஸ் இணைப்பை பெற விரும்புபவர்கள் விரைவில் வாங்கி கொள்ளலலாம்.

எல்பிஜி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஈ-கேஒய்சி சரிபார்ப்பை OMC நிறுவனங்கள் கட்டாயமாக்கியுள்ளது. எனவே எண்ணெய் நிறுவனங்கள் சொல்லும் காலக்கெடுவிற்குள் கண்டிப்பாக எல்பிஜி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். அப்படி முடிக்காத பட்சத்தில் கேஸ் முன்பதிவு செய்வதில் பிரச்சனை ஏற்படும். புக்கிங் செய்வதில் எந்த தாமதமும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் கேஒய்சி சரிபார்ப்பை அவசியம் முடிக்க வேண்டும்.

இனி சிலிண்டர் வாங்க யாரும் கேஸ் ஏஜென்சிக்கு செல்ல வேண்டாம். பெங்களூரில் 10 கிலோ எடை கொண்ட HP நவ்யா மற்றும் 5 கிலோ எடை கொண்ட மினி எல்பிஜி சிலிண்டர்களை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் டெலிவரி செய்து வருகிறது. குட்டி சிலிண்டர் தேவைப்படும் பேச்சிலர்கள், மாணவர்கள், வேலைக்காக வெளியூரில் தங்கி இருப்பவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இனி சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களில் ஒவ்வொரு ஆண்டும் 4 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் பெற முடியும். இதற்கு முன்னர் 9 சிலிண்டர் வரை மானியம் கிடைத்தது. ஆனால் இப்போது இந்த வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் டொமஸ்டிக் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தாலும் 19 கிலோ எடை கொண்ட ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ.170 முதல் 182 ரூபாய் வரை குறைந்திருக்கிறது.

பிஎன்ஜி என்று சொல்லப்படுகிற குழாய் மூலம் எரிவாயு பெறும் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பாரத் கேஸ், HP கேஸ், எல்பிஜி கேஸ் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் அதை 30 நாட்களுக்குள் மீண்டும் ஒப்படைத்து விட வேண்டும் அல்லது கேஸ் கனெக்சனை ரத்து செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் பிஎன்ஜி வசதியே இல்லாத ஊருக்கு மாறினாலும் மீண்டும் எல்பிஜி கனெக்சனை எளிதில் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக இனி உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி-ஐ வழங்கினால் மட்டுமே கேஸ் டெலிவரி செய்யப்படும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks