Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!

Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
News Image

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று சென்னை வருகை புரிந்தார். அவரை தமிழக சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்தார். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்த சந்திப்பின்போது என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தார்? என்பதை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

மனுவில் இருப்பது என்னென்ன?

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலேவை அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

நமது சமூக நீதித்துறையின் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய அமைச்சர் அதாவலேவிடம் அளித்தோம்.

8 லட்சமாக அதிகரிக்க வேண்டும்:

1. பட்டியலின மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் & போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கை உரிய நேரத்தில் விடுவிக்க வேண்டும்.

இன்று (17.07.26) சென்னை வருகை தந்த மாண்புமிகு சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ராம்தாஸ் அதாவலே அவர்களை அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

நமது சமூக நீதித்துறையின் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு ஒன்றிய… pic.twitter.com/yxSle17Dv5
— வன்னி அரசு (@VanniTamizhVCK) July 17, 2026

2. பட்டியலின மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் & போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை:

3. விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை கீழ் வழங்கப்படும் Maintenance படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

4. பட்டியலின மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றிய அரசு திட்டமான PM-AJAY கீழ் நிலுவையில் உள்ள ரூ.154.08 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்.

நிலுவைத் தொகை:

5. சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1955 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.61 கோடி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்.

6. தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களின் பெயர்களில் உள்ள  'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றுவதற்கு, உரிய சட்ட நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

நமது கோரிக்கைகளை கவனத்தோடு கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இச்சந்திப்பின்போது சமூக நீதித்துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன் உடன் இருந்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks