133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?

133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
News Image

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் காப்புக் காடுகளுக்கு இடையே தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கமாக சென்னை பெருநகர காவல், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டி அழிப்பது வழக்கம்.

133 வழக்குகளில் சிக்கிய போதைப்பொருட்கள்

தற்போது காஞ்சிபுரம் சரக மண்டலத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 133 வழக்குகளில், சுமார் 748 கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இந்த போதைப்பொருட்களை முழுமையாக அழிப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.

உயரதிகாரிகள் முன்னிலையில் எடை சரிபார்ப்பு

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் அனைத்தும் தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள எரியூட்டும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சசங் சாய் முன்னிலையில், கஞ்சா மூட்டைகளின் எடை துல்லியமாக சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர், அவை அனைத்தும் தீயிட்டு முழுமையாக எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டன.

மதிப்பு மற்றும் பங்கேற்ற அதிகாரிகள்

தீயிட்டு அழிக்கப்பட்ட இந்த கஞ்சா போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் வரை இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அழிப்புப் பணியின் போது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மல் ஜமால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் பங்கேற்று கண்காணித்தனர். போதைப்பொருள் நடமாட்டத்திற்கு எதிரான காவல்துறையின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks