குதிரை பேரம் நடைமுறையை தொடங்கி வைத்த திமுகவுக்கு அதனைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

அவர் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வைகோ, “குதிரை பேரம் நடப்பதாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆளுநரிடம் சென்று புகாரளித்துள்ளது. திமுகவைப் பார்த்து கேள்வி ஒன்று கேட்கிறேன். இத்தகைய குதிரை பேரத்தை ஆரம்பித்து வைத்ததே நீங்கள் தானே. கம்பம் தொகுதியில் ஜெயித்த மதிமுக எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து பின்பு நடந்த இடைத்தேர்தலில் அவரை திமுக சார்பில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்தது பெருச்சாளி பேரமா?.. அதுவும் குதிரை பேரம் தான். அதைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?.. இதேபோல தான் அதிமுகவில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணனையும் அழைத்து வந்தீர்கள். இப்படியெல்லாம் முன்பு திமுக தான் வழிகாட்டியது.

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலான நிலைப்பாடு பலருக்கு அங்கு பிடிக்கவில்லை. 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்தார்கள். இந்த முயற்சி வெற்றி பெறாது என தெரிந்தவுடன் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என பூசி மெழுகினார்கள். ஆனால் பேச்சுவார்த்தை நடந்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பேபி உறுதி செய்தார். சி.வி.சண்முகம், காதர் மொய்தீன் போன்றோரும் வெளிப்படையாக போட்டுடைத்து விட்டனர். இதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை திமுக இழந்தாலும் அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பியது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட தவெக ஆட்சியமைக்க கூடாது என நினைக்கிறீர்களே அதற்கெல்லாம் என்ன காரணம்?

தவெக ஆட்சி வந்து நல்ல காரியம் செய்துள்ளது. ஜனநாயகத்தை நாசப்படுத்தும் விதத்தில் ஊழல் தலை விரித்தாடிய நிலையில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்ற நிலை இருந்தது. இந்த பிரச்னையெல்லாம் அன்றாடம் சந்திக்கின்றவர்கள் ஒரு பைசா கூட இப்போது கமிஷன் கொடுக்காமல் அனுமதி பெறுகிறார். இதுதான் தவெக அரசின் இமாலய சாதனை. ஊழலை வேரோடு அகற்றியுள்ளார். எனினும் தவெக ஆட்சி எப்போது அகலும் என காத்திருக்கிறார்கள். அதிகாரத்தை இழந்த உங்களால் அமைதியாக இருக்க முடியாதா?.. தவெகவுக்கு ஆதரவாக பேசுவதால் ரொம்ப கோபம் கொண்டு என் மீது பாய்கிறார்கள்.

இதையும் படிங்க: CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?

மதிமுகவை நடத்திய விதம், இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம், சம மரியாதை உள்ளிட்டவை கேட்டோம். வேறு பேச்சுக்கெல்லாம் இடமில்லை என மதிமுக குழுவிடம் முகத்தில் அடித்தாற்போல சொன்னார்கள். மதிமுக ஒரு இடத்தில் சொந்த சின்னத்தில் நிற்க வாய்ப்பு கேட்டபோது முதலில் ஒப்புக்கொண்டார்கள். பின்னர் ஒப்புக்கொள்ளவில்லை.

கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் சொந்த சின்னத்தில் நிற்கும்போது நாங்கள் ஏன் நிற்கக்கூடாது என கேட்டோம். அதையெல்லாம் கேட்கக்கூடாது என திமுக தெரிவித்தது. இருந்தாலும் நான் 34 தொகுதிகளில் திமுகவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டேன். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டேன். மதிமுகவை நடத்திய விதத்தில் தொண்டர்கள் நம்மை அவமதிக்கிறார்கள் என கூறி கூட்டணி வேண்டாம் என பொதுக்குழுவில் கூறினார்கள். அதன்படி முடிவெடுத்தோம்” என தெரிவித்தார்.

Source: Read Full Article