மின்சார ரயில் சேவை ரத்து - தென்னக ரயில்வே

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார இரயில் வழித்தடத்தில் இன்று (ஜூலை 5) மற்றும் ஜூலை 12 ஆகிய தேதிகளில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்கங்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 03.30 வரை மின்சார இரயில் சேவை ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து , சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இன்றும் , வரும் 12 ஆம் தேதி ஆகிய நாட்களில், பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக சென்னை கடற்கரை ரயில் நிலையம் - தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது. மேலும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

எந்தெந்த வழித் தடங்களில் பேருந்துகள் செல்லும் ?

அதன்படி பயணிகளின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் (05.07.2026) காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அந்த வகையில் தியாகராய நகர் , ராயபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய முக்கியப் பகுதிகளிலிருந்து இயக்கப்படும் கூடுதல் பேருந்துகளின் வழித் தடங்கள் மற்றும் நேர விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

அதில் தியாகராய நகரிலிருந்து தாம்பரத்திற்கு சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம் வழியாக காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பேருந்து என விரிவான கால அட்டவணையின்படி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதே போல், ராயபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு பிராட்வே, சென்ட்ரல், எல்.ஐ.சி, சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம் வழியாக காலை 9.05 மணி முதல் மாலை 4.00 மணி வரை மிகக் குறுகிய கால இடைவெளிகளில், அதாவது 5 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், ராயபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு பிராட்வே, சென்ட்ரல், எழும்பூர், வள்ளுவர் கோட்டம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம் வழியாக காலை 9.00, 9.45, 10.30, 11.15 மற்றும் மதியம் 12.00, 12.45, 1.30, 2.15, 3.00, 3.45 ஆகிய நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து தியாகராய நகருக்கு பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை வழியாக காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வழக்கம்போல ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரத்திலிருந்து ராயபுரத்திற்கு பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, எல்.ஐ.சி, சென்ட்ரல், பிராட்வே வழியாக காலை 9.05 மணி முதல் மாலை 4.00 மணி வரை 5 நிமிட இடைவெளிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தாம்பரத்திலிருந்து ராயபுரத்திற்கு பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், வள்ளுவர் கோட்டம், எழும்பூர், சென்ட்ரல், பிராட்வே வழியாக காலை 9.00 மணி முதல் மாலை 3.45 மணி வரை குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

Source: Read Full Article