ஒரு சரியான தலைவருடன் இயங்க வேண்டும் என நினைத்து தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன் என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இலக்கியவாதிகள் அரசியல் கட்சியில் இருப்பது புழுக்கமாக இருக்கிறது. கற்பனையாக நிறைய கவிதை எழுதும் கலைஞர்கள் நிஜ வாழ்க்கையில் தோற்றுப் போவார்கள். இலக்கியவாதிகள் சகிப்புத்தன்மையோடு இயக்கினால் அரசியலில் வெற்றி பெற முடியும். ஒரு தலைவர் தவறே செய்தால் கூட சகித்துக் கொண்டால் மட்டுமே நம்மால் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள முடியும்.

அதிமுகவில் இருந்து பலரும் தவெகவுக்கு ஏராளமானோர் சென்ற நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால் பிரதான காரணமாக திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தான் என இருக்கிறது. புதுச்சேரியில் 47 எம்.எல்.ஏ.,க்கள் முன்னாலும் திமுக ஆதரவு பற்றி எடப்பாடி பழனிசாமி பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் அப்படி செய்தால் மக்களிடம் நம்பிக்கை போய்விடும் என சொன்னார்கள். இதை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனும் தனது நேர்காணலில் உறுதி செய்தார் என தெரிவித்தார்.

ட்ரெண்ட் செட்டராக மாறிய வார்த்தை

தொடர்ந்து பேசிய வைகைச்செல்வன், “விஜய் திமுகவை தீய சக்தி, தவெக தூய சக்தி என சொன்னது ட்ரெண்ட் செட்டராக மாறிவிட்டது. விஜயின் 30 ஆண்டுகளான திரை கவர்ச்சி, துணிச்சலாக பேசியது, தனது உச்ச நிலையை விட்டு அரசியலுக்கு வந்ததால் நேர்மையாக இருப்பார் என மக்கள் நினைத்தார்கள். எந்த விஷயத்திலும் சமரசம் இல்லை என தெரிவிக்கிறார். அவர் மீது பிரச்னைகள் முன்வைக்கப்படாலும் பாவமாக தான் பார்க்கப்படுகிறார்.

மின் தடை பற்றி என் ஊரில் உள்ள பெண்களிடம் பேசினால் நீங்கள் தானே இப்படி செய்கிறீர்கள் என சொல்கிறார்கள். என் சின்னம்மா 3 நாட்களாக விஜய் ஆட்சியமைக்க விடவில்லை என சாப்பிடக்கூட இல்லை. இது இயல்பாக வரும் ஈர்ப்பு. அது விஜய்க்கு கைகூட மக்கள் தலைவராக உயர்ந்து விட்டார். காலப்போக்கில் அவர் நடத்தை, ஆட்சியின் திட்டங்கள் ஆகியவை பேசுபொருளாக மாறி மக்கள் நேசிக்கக்கூடிய தலைவராக விஜய் வருவார். அவர் வெற்றியை யாரும் கணிக்கவில்லை” என கூறினார்.

Also Read: Anitha Radhakrishnan: 6 மாதத்தில் முதல்வராகும் மு.க.ஸ்டாலின்.. தவெகவுக்கு கெடு விதித்த அனிதா ராதாகிருஷ்ணன்!

எங்கு சுற்றிலும் விசிலுக்கு தான் ஓட்டு

மேலும், சட்டமன்ற தேர்தலின்போது திருவிழா மாதிரி வந்து வாக்களித்தார்கள். மீண்டும் திமுக வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். எல்லா விரல்களிலும் விசிலுக்கு தான் செல்கிறது என பூத்தில் பணியாற்றுபவர்கள் கூட சொன்னார்கள். நான் முதலமைச்சர் விஜயுடன் எடுத்த போட்டோவை ஸ்டேட்டஸில் வைத்தேன். ஒரு மணி நேரத்தில் என் வீட்டில் பணியாற்றியவர்கள் நாங்கள் விசிலுக்கு தான் போட்டோம் என தைரியமாக வந்து சொன்னார்கள். ஜெயலலிதாவுடன் அதிமுக போய் விட்டது. இனி திரும்பவும் அதிமுகவுக்கு ஓட்டில்லை. விசிலுக்கு தான் போடுவோம் என சொல்கிறார்.

என் தம்பி மகன் 6வது படிக்கிறான். அந்த சிறுவன் என் அம்மாவுக்கு போன் பண்ணி விஜய்க்கு ஓட்டு போட சொல்லியும், அவர் எனக்கு வேண்டப்பட்டவர் எனவும் தெரிவித்திருக்கிறான். ஓட்டு போடாவிட்டால் நான் பேச மாட்டேன் என கூறியிருக்கிறான். அந்த ஈர்ப்பு விஜய்க்கு கிடைத்திருக்கிறது. திராவிட இயக்க கொள்கை உயிர்ப்புடன் இருக்கிறது. தலைவர்கள் தான் தோற்று விட்டார்கள். இதை நான் ஆராய்ந்து தான் சொல்கிறேன்.

நான் அமைச்சராக, அரசு தலைமைக் கொறாடாவாக இருந்துள்ளேன். திராவிட கொள்கைகளுடன் இணைந்து பயணிக்கணும். சில கசப்புகள் காரணமாக தவெகவுக்கு வந்து விட்டேன். இனி ஒரு சரியான தலைவருடன் இயங்க வேண்டும் என நினைக்கிறேன். விஜய் பற்றி பேசுவது தற்புகழ்ச்சி அல்ல, நிதர்சனமானது.

ஒரு நல்ல தலைவரை பாராட்டாமல் இருந்தால் வருங்கால தலைமுறை என்னை வசைபாடி விடுவார்கள். என்னை தவெகவுக்கு யாரும் அழைக்கவில்லை. அதிமுகவில் இருந்து கோபத்தில் வந்து விட்டேன். முதலில் பொதுச்செயலாளர் ஆனந்தை தான் போய் பார்த்தேன். வாசல் வரை வந்து வரவேற்று தவெகவுக்கு வாங்க, கண்ணியத்துடன் நடத்துவோம் என கூறினார். பின்னர் கார் கதவை திறந்து விட்டு என்னை வழியனுப்பி வைத்தார். அதைப் பார்த்து எனக்கு சிலிர்த்து விட்டது. முதலமைச்சர் விஜயின் கண்ணாகவும், காதாகவும் ஆனந்த் இருக்கிறார்” என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article