TNPSC Group-1 Preliminary Exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப்-1 தேர்வு மூலம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

க்ரூப்-1 தேர்வு தேதி மாற்றம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.08.2028 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி பணிகள்) அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09. 2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. தேதி மாற்றத்திற்கான சரியான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம், இந்த தேர்வுக்கு தயாராக தேர்வர்களுக்கு கூடுதலாக சுமார் 16 நாட்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article