TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?

TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
News Image

தமிழகத்தில் தவெக ஆட்சி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மே மாதம் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. இதனையடுத்து ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. அதே நேரம் அதிமுக ஆட்சியை பிடித்து விடும் என எதிர்பார்த்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கிடைக்கும் வகையில் 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது.

தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்

இந்த நிலையில் தவெகவுடன் கூட்டணி அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் திட்டமிட்டனர். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாத காரணத்தால் அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரம் அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்பியிருந்தார்.

இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

இந்த நிலையில் இன்று பிஹார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செயலாம் எனவும், 14ஆம் தேதி வேட்புமனு பரிசீலனையும், ஜூலை 30ஆம் தேதி வாக்குப்பதிவும்,  ஆகஸ்ட் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் இடைத்தேர்தல் தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.  தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பிய நிலையில், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks