Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!

Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
News Image

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி அமைவதற்கு மிகப்பெரிய பலமாக விசிக உள்ளது. விசிக-வின் இரண்டு எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்தார்.

திருமா மீது விமர்சனம்:

இந்த சூழலில், திருமாவளவன் திமுக-வுடன் தொடர்ந்து நட்பு வட்டாரத்தில் இருப்பது கூட்டணிக்குள் புகைச்சலை உண்டாக்கி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், மதிமுக மறைமுகமாக திருமாவளவனை விமர்சித்து வருகின்றனர்.

விசிக தலைவர் திருமாவளவன் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,

இரண்டு சீட்டு வைத்து ஆட்டமா?

ரெண்டு சீட்டு வச்சுட்டு இவ்ளோ ஆட்டமானு கேக்குறாங்க. அந்த இரண்டு சீட்டு இல்லாமதான் ஆட்சியமைக்க முடியலங்குற தவிப்பு அவங்ககிட்ட இருக்குது. ஆட்சியமைப்பதற்கு இந்த இரண்டு சீட்டு அவசியம் அவர்களுக்குத் தேவை. ஆகவே அது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், அவர்களுக்கு நம் மீது உள்ள காழ்ப்புணர்வு. எப்படியாவது நம்மை விமர்சிக்க வேண்டும். 2 இடத்துல ஜெயிச்சுட்டு அமைச்சர் பதவியை வாங்கிட்டாங்களே? அதை நாம் ஒன்றும் பெரியதாக நினைக்கவில்லை. அதனால், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற்றுவிடப்போவதில்லை. இதனால், சாதிய வன்கொடுமைகள் உடனே நின்றுவிடப்போவது இல்லை.

சமூகத் தீமை:

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் கூட இதுபோன்ற வன்கொடுமைகள் தொடரும். அதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமே பொறுப்பில்லை. திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சியில் இருந்தாலும், தவெக ஆட்சியில் இருக்கும் சூழலிலும் சரி நாளை நாமே ஆட்சியில் இருந்தாலும் சரி இந்த சமூகத் தீமை உடனே முடிந்து விடாது. தடுத்துவிட முடியாது.

இந்த ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் நோக்கில் பலரும் விமர்சித்தார்கள். திமுக ஆட்சியிலும் இதை நான் சொன்னேன். அப்போது திமுக சொம்பு என்றார்கள் நம்மைப் பிடிக்காதவர்கள். முட்டுக்கொடுக்கிறான் திருமா என்றார்கள்.

நட்பே கூடாது:

யார் ஆட்சியில் இருந்தாலும் இது நடக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அணியில் சேர்ந்தால் இன்னொரு அணியுடன் உறவே கொள்ளக்கூடாது, நட்பே வைத்துக்கொள்ளக் கூடாது, நட்பு பாராட்டக்கூடாது, நட்பு இருப்பதாக கூட சொல்லக்கூடாது. சொன்னால் நம்பிக்கைக்கு அது எதிரானது. துரோகமானது. இப்படி எல்லாம் பேசுகிற நிலையை நாம் பார்க்கிறோம். விசிக இடதுசாரிகள் அரசியலை முன்னெடுக்கும் ஒரு கட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks