Sabarivarman Custodial Death : அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?

Sabarivarman Custodial Death : அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
News Image

நாகர்கோவில் - கைதி சிறையில் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தனது வீட்டில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் புகையிலை, குட்கா போன்றவற்றை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் சபரிவர்மனை விசாரைணக்கு அழைத்து சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு கடந்த 9 ஆம் தேதி  நாகர்கோவிலில் உள்ள கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில்  கடந்த 13 ஆம் தேதி காலை சபரிவர்மனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை ஏற்றுக்கொள்ளாத சபரிவர்மன் குடும்பத்தினர் போலீசார் சபரிவர்மனை அடித்து கொலை செய்துள்ளதாக  கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சபரிவர்மன் உடலை பெற மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சபரிவர்மன் அடித்து கொலை- பிரேதபரிசோதனை

இந்த நிலையில் நேற்று முன் தினம் சபரிவர்மனின் உடல்  பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்படது உறுதி செய்யப்பட்டது. சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் கொடுங்காயங்கள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக  தலையில் 2 இடங்களில் பலத்த காயமும், பின்னந்தலை மற்றும் பின்னங்கழுத்து பகுதியிலும் காயங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது. வலது கையில் 6 இடங்களிலும், இதே போல இரண்டு கால்களிலும் கடுமையான காயங்களும்,  இடது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் 7 செ.மீட்டர் அளவில் காயம் உள்ளதும்  பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

எனவே சபரிவர்மனை போலீசார்   அடித்து கொலை செய்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், நாகர்கோவில் சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாகர்கோவிலில் உள்ள கிளைச் சிறை கைதி 8 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 4 வது நாளாக சபரிவர்மன் உடலை பெறாமல் அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அரசு வேலையை மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்

இந்த நிலையில், நேற்று இரவு தமிழக அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் சபரிவர்மன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்,. அதே நேரம் இன்றைய தினம் சபரிவர்மன் உடலை பெற்று அடக்கம் செய்ய கேட்டுக்கொண்டனர்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத சபரிவர்மன் குடும்பத்தினர்,  சபரிவர்மன் பிரேதபரிசோதனை செய்யப்பட்ட வீடியோவை தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும், அதனை எங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் காண்பித்து பிரத பரிசோதனை பற்றிய சந்தேகத்தை தீர்த்து கொள்வோம் என கூறியுள்ளனர். அதுவரை எங்களுக்கு நிவராண உதவியும், அரசு வேலையும் வேண்டாம் என உறுதியாக தெரிவித்தனர். இதனால் அமைச்சர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks