Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்

Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
News Image

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கக்கூடிய, அமெரிக்கா முன்மொழிந்துள்ள சட்டத்தை, இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மசோதா குறித்து அமெரிக்கா கூறுவது என்ன.?

இந்த மசோதாவுக்கு சுமார் 60 அமெரிக்க செனட்டர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க விசா கொள்கைகளால், இந்திய குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதற்காக, அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன.?

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், "நாங்கள் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும், முன்மொழியப்பட்ட இந்த சட்டம் குறித்தும் அறிந்திருக்கிறோம்" என்று கூறினார்.

அதோடு, முன்மொழியப்பட்ட மசோதா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எண்ணெய் வாங்குவதைப் பொறுத்தவரை, நாங்கள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்குகிறோம். அது எங்கள் கண்ணோட்டத்தைப் பொறுத்தது" என்று தெரிவித்தார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலை தடைசெய்யும் இந்தச் சட்டத்தை, ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டால் மற்றும் மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். உக்ரைனுக்கு எதிரான தனது போருக்கு நிதியளிக்க ரஷ்யா பயன்படுத்தும் வருவாயைத் தடுப்பதற்காக, அதன் நிதி நிறுவனங்கள் மற்றும் எரிசக்தித் துறை மீது கடுமையான தடைகளை விதிப்பதே இதன் நோக்கமாகும்.

அமெரிக்கா எந்தெந்த நாடுகள் மீது வரிகளை விதிக்க திட்டமிடுகிறது.?

தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டம், சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய ஐந்து முக்கிய ரஷ்ய எண்ணெய் வாங்குபவர்கள் மீது 100 சதவீத வரியை விதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமெரிக்க செனட்டர் ப்ளூமென்டல் செவ்வாயன்று கூறினார். ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கும் நாடுகளை இந்த மசோதா குறிவைக்கும். மாஸ்கோ மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில், இந்த நாடுகள் கூடுதல் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

மேலும், வெளிநாட்டு மாணவர்கள், தனி நபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசா விதிகளை  அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. இதன் மூலம், அரசாங்க கண்காணிப்பின்றி அவர்கள் காலவரையின்றி நாட்டில் தங்குவதற்கு அனுமதி அளித்திருந்த பழமையான கொள்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை பெருமளவிலான இந்தியர்களை பாதிக்கக்கூடும்.

அமெரிக்க விசா தொடர்பாக ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியது என்ன.?

அமெரிக்க விசா விதிமுறை மாற்றம் குறித்து பேசிய ரந்தீர் ஜெயஸ்வால், "விசா விதிமுறைகள் தொடர்பான சில அறிக்கைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். விசா விதிமுறைகள், விசா வழங்கும் செயல்முறை மற்றும் குடிவரவு விவகாரங்கள் ஆகியவை எந்தவொரு நாட்டின் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டவை" என்று கூறினார். மேலும்,  “சட்டப்பூர்வமான பயணிகள் மற்றும் மாணவர்கள் உட்பட மற்றவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பான பிரச்னைகள் எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படும்போது, ​​எங்கள் மக்களின் இன்னல்களை தணிப்பதற்காக, இந்த பிரச்னைகளை நாங்கள் அமெரிக்க தரப்பிடம் எழுப்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks