தவெகவை விமர்சித்த ஆர்.எஸ் பாரதி

தமிழகத்தில் தவெக தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், திமுக- தவெக இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், பெற்ற தாய்,தந்தை, கட்டிய மனைவிக்கு சோறு போடாமல், பெற்ற பிள்ளைகளை நடுரோட்டில் விட்டு விட்டு, மன்றத்தில் வந்து அப்பாவை தேடுகிறேன் என்று கேட்கிறவருக்கு அப்பாவின் புகழ் பெருமை தெரியாது என விமர்சித்தார். 93 வரை எங்களிடம் ராஜாவாக (வைகோ) இருந்தார். அவரை விடுதலை புலி என்று சொன்னோம் இன்று கொட்டை போன புலியாக இருக்கிறார்.

திமுக- பாஜக ரகசிய ஒப்பந்தமா.?

ஒரு மனிதன் தடம் புரண்டால், பாதை மாறினால் அரசியலில் எவ்வளவு கேவலங்கள் ஏற்படும் என்பதற்கு இருந்த உதாரணம் கோபால்சாமியை (வைகோ)தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது . திமுகவும் பாஜகவும் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக வைகோ கூறுகிறார். எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை, அவ்வாறு வைத்தாலும், வைத்து விட்டு போகிறோம் அதைக் கேட்க நீங்கள் யார் ? என பேசினார். ராஜாஜி தமிழக முதல்வராக இருந்தபோது திமுகவை மூட்டை பூச்சி போல் நசுக்குவேன் என்றார். நம்ம கட்சி மேடைக்கு அவர் வந்தார் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பியது திமுக தான் . திமுக காரன் கைவிரலை வெட்ட வேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜர் மேடையில் பேசிய நேரத்தில் உயிரோடு இருக்கும்போது அவருக்கு சிலை வைத்து அழகு பார்த்தது திமுக தான். இந்த காமராஜரால் அளிக்க முடியாத திமுகவை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் எங்களை தொட்டுப் பார்க்கிறாயா .? ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

கூட்டணி கட்சிகள் செய்த துரோகம்

இரண்டு மாத கால ஆட்சியில் விஜய் இதை சாதித்து விட்டார் என்று அந்தக் கட்சிக்கு போனால் கூட பரவாயில்லை. தேர்தல் முடிவு வந்த அன்றே ரெயிலில் துண்டு போட்டு இடம் பிடிப்பது போல ஆதரவு கொடுத்தனர் காங்கிரஸ் கட்சியினர் . இவ்வளவு அயோக்கியத்தனமான அரசியலை தமிழகத்தில் நாம் பார்த்திருக்கிறோமா? என கேள்வி எழுப்பியவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் செய்த துரோகம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. தேர்தல் நேரத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காக திமுக தலைவர் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். ஒரு தோல்வியினால் திமுக அழிந்துவிட்டது என்று நினைப்பவர்கள் முட்டாள்கள்.

டயர பார்த்து ரிலீஸ் போடறாங்க, சத்துண கூடத்தில் ஆய்வு என்று கூறிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கைவிடுகிறார்கள். கமிஷனர் இருக்கையில் இவர்கள் போய் உட்காருகிறார்கள். இப்பதான் எங்களுக்கு ஓட்டு போடாத அரசு ஊழியர்கள் நினைத்து பார்ப்பார்கள். என்னடா கூத்து நடக்கப்போகிறது என்று பாருங்கள் த. வெ. க. ஆட்சி நீண்ட நாளைக்கு நீடிக்காது. நாம போக வைக்க வேண்டாம் என தெரித்தார். ஆதவ் அர்ஜுனா ஒருத்தர போதும். புதிதாக திறக்கப்படும் ஹோட்டலுக்கு சென்று ருசி பார்ப்பது போல அரசியலில் ஒவ்வொரு கட்சிக்கும் சென்று பார்த்துவிட்டு வருபவர் தான் ஆதவ் அர்ஜுனா.

ஆதவ் அர்ஜூனாவால் ஆபத்து

திமுகவில் கொஞ்ச நாள் குப்பை கொட்டினார். பின்னர் போன பிறகு தான் அவர் கொட்டும் தேள் என்று தெரிந்தது. கொட்டுற தேளை வெட்டும் சக்தி திமுகவிற்கு உண்டு. எம் பி சீட்டு கிடைக்கும் என்று பார்த்தார் கிடைக்கவில்லை என்றதும் விசிக சென்றார். இப்போ த. வெ. கவில் இருக்கிறார். விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போவது என்றால் ஆதவ் அர்ஜுனாவினால் தான் போகிறது. பத்து நாட்களாக அவர் வாய் திறக்கவில்லை எதோ நடக்கிறது.

ஏனெனில் கேரளாவில் அவரது குடும்பத்தின் மீது வழக்கு இருக்கிறது. 924 கோடி லாட்டரி மோசடி செய்ததாக ஆதவ் அர்ஜுனா மனைவி, அவரது மாமியார் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோன்று பல அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. அவையெல்லாம் தூசி தட்டப்படும்போது நல்ல காலம் வரும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

Source: Read Full Article