பள்ளிக்கரணையில் கொட்டித்தீர்த்த மழை.. காஞ்சி, செங்கல்பட்டு நிலவரம் என்ன தெரியுமா? உடனே படியுங்கள்!

பள்ளிக்கரணையில் கொட்டித்தீர்த்த மழை.. காஞ்சி, செங்கல்பட்டு நிலவரம் என்ன தெரியுமா? உடனே படியுங்கள்!
News Image

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி, சென்னை பள்ளிக்கரணையில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு இடங்களில் நிலவும் வளிமண்டல சுழற்சி

தற்போதைய வானிலை நிலவரத்தின்படி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அடுத்த சில நாட்களுக்கான மழை எச்சரிக்கை

இந்த வளிமண்டல சுழற்சிகளின் விளைவாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்றும், வரும் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் இன்றைய வானிலை நிலவரம்: Kanchipuram Today Weather Forcast

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 33°C வரையும், இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26°C வரையும் பதிவாக வாய்ப்புள்ளது. பகல் பொழுதில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 25% ஆகவும், இரவில் 10% ஆகவும் உள்ளது. மேற்கில் இருந்து மணிக்கு 8 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும். ஈரப்பதம் 64% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் Chengalpattu Weather Forcast Today

செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று வானம் மேகமூட்டத்துடனேயே காட்சியளிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 34°C வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°C வரையும் நிலவக்கூடும். பகல் நேரத்தில் மழைக்கான வாய்ப்பு 10% ஆகவும், இரவு நேரத்தில் 20% ஆகவும் இருக்கும். தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 மைல் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. காற்றின் ஈரப்பதம் 66%  ஆக பதிவாகக் கூடும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks