R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
News Image
கானல் நீர் நீரைப் போன்ற திட்டங்கள்
முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியிலே சொன்ன உத்தரவாதத்தின் அடிப்படையிலே, முதல் முதலாக விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி என்று எதிர்பார்த்த  விவசாயிகளுக்கு  விஜயின் அறிவிப்பு ஒரு பேர் இடியாக கொடுத்திருக்கிறது. ஏமாற்றத்தை அளித்த காரணத்தினாலே, நாடு முழுவதும் இன்றைக்கு விவசாயிகள் தொடர் போராட்டத்திலே ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் மின்சாரம் எங்கே இருக்கிறது.?
தேர்தல் அறிக்கையிலே  வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது ஆட்சி அமைந்தவுடன் 500 யூனிட் வரை உபயோகிக்கும் மின் பயனாளர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சார கட்டணம் இலவசம் என்று அறிவிப்பு நடைமுறையிலே வெறும் கண் துடைப்பாகத்தான் இருக்கிறது.அதுமட்டுமல்ல, தற்போது தமிழகத்திலே மின்சாரம் எங்கே இருக்கிறது என்று தேடுகிற வகையிலே, மின்சாரத்தை காணோம் என்று இருளிலே மூழ்கி இருக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா பள்ளிப்படிப்பை ஊக்குவிக்க பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு 25,000 ரூபாயும்,,தாலிக்கு தங்கம் வழங்கினார் அதோடு எடப்பாடியார் 4 கிராம் என்பதை 8 கிராமாக உயர்த்தி வழங்கினார்  ஆகவே இன்றைக்கு தாய் மாமனாக இருந்து 1 கிராம் அரசு மருத்துவமனையிலே பிறந்த குழந்தைகளுக்கு வழங்குகிற  விஜய் பெண் கல்வியை ஊக்குவிக்கின்ற வகையிலே பெண் திருமண உதவித்தொகை திட்டமாக 1 பவுன் தாலிக்கு தங்கம் வழங்குகிற திட்டத்தை  ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன் விஜய்  மனது வைப்பாரா, அறிவிப்பை எதிர்பார்க்கலாமா?
ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழா
பெண்கள் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? சட்டம் ஒழுங்கு சீர்கேடை எப்படி மீட்டெடுப்பார்? பெண்கள் பாதுகாப்புக்கு எப்படி உறுதி அளிப்பார்? போதைப் பொருள் நடமாட்டத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவார்? என்று கவலையிலும் வேதனையிலும் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை அமைச்சர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ளார்  அதில் தமிழகத்திலே மட்டுமல்ல, உலகெங்கும் வெளியிடப்படுகிற ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் கொண்டாட வேண்டும் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எல்லோரும் இதிலே பங்கு பெற்று வேண்டும் என கூறியுள்ளார்
அடுத்தது அரசு விடுமுறையா.?
தலை குனிந்திருக்கிற தமிழகத்தை தலை நிமிர்த்த ,மொழிப் போராட்டத்திலே உயிர்நீத்திய தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவதைப் போல, உரிமைப் போராட்டத்திலே உயிர்நீத்திய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதைப் போல, தியாகிகள் தினம் கடைபிடிப்பதைப் போல, திருவிழாக்களை கொண்டாடுவதைப் போல, பொங்கலைப் போல, தீபாவளியைப் போல, ஜனநாயகன் பட வெளியீட்டு விழாவை . திருவிழா போல் கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்திருக்கிற அமைச்சர் புஸ்சி ஆனந்த் அடுத்த அதிரடி அறிவிப்பாக ஜனநாயக படம் வெளியிடுகிற நாளில் அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆகவே எங்கே செல்லுகிறது இந்த தமிழகம் என்று கவலையோடு நாம்  பொறுத்திருக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks