சென்னை: மத்திய அரசின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), பேராசிரியர் அல்லாத (Non-Teaching) பிரிவில் காலியாக உள்ள 267 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை பெற்றவர்களும் தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கலாம் என்பதால் வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

267 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

டெல்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் காலியாக உள்ள 267 பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

என்னென்ன பணியிடங்கள்?

இந்த ஆட்சேர்ப்பில் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:

எக்ஸிகியூட்டிவ் என்ஜினியர் (சிவில், மின்சாரம்)
உதவி நூலகர்
உதவிப் பதிவாளர்
மக்கள் தொடர்பு அதிகாரி
ஆராய்ச்சி அதிகாரி
அமைப்பு ஆய்வாளர்
காப்பகப் பொறுப்பாளர்
தனிச் செயலாளர்
சீனியர் அசிஸ்டண்ட்
இளநிலைப் பொறியாளர் (சிவில்)
உதவி ஆவணக் காப்பாளர்
சுருக்கெழுத்தர்
ஆய்வக உதவியாளர்
லிஃப்ட் இயக்குபவர்
இளநிலை உதவியாளர்
மெஸ் ஹெல்ப்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

கல்வித் தகுதி என்ன?

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு (SSLC), ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியிடங்களுக்கு பணி அனுபவம் கட்டாயமாகும். குறிப்பாக Private Secretary பணிக்கு பட்டப்படிப்புடன் ஸ்டெனோகிராபி, தட்டச்சு திறன் மற்றும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

2026 ஜூலை 27-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். பணியிடங்களைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும். அதிகபட்சமாக சில பணியிடங்களுக்கு 45 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு விதிகளின்படி:

எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

வயது உச்சவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் பணிக்கேற்ற திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். சில பணியிடங்களுக்கு திறன் தேர்வு மட்டும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

பணியிடங்களைப் பொறுத்து விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குரூப் 'A' பணியிடங்கள் – ரூ.1,500
குரூப் 'B' மற்றும் 'C' பணியிடங்கள் – ரூ.1,000

சில ஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டண விலக்கு அல்லது சலுகைகள் அரசு விதிகளின்படி வழங்கப்படும்.

ஜூலை 27 கடைசி தேதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 2026 ஜூலை 27 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதியம், தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பில் பார்த்து, தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே காலதாமதம் செய்யாமலும், கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை இன்றே அனுப்பிடுங்க. அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. என்ன ரெடியாகிட்டீங்களா?

Source: Read Full Article