புதுச்சேரி : புதுச்சேரி மின்சாரத் துறையின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (16-07-2026, வியாழக்கிழமை) நகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் நேரங்களின் விவரம் பின்வருமாறு:

பாகூர் மற்றும் கோர்காடு துணை மின் நிலைய பகுதிகள்

மின்தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை

மின்தடை பகுதிகள் :

தவளக்குப்பம்

கிருமாம்பாக்கம்

பாகூர்

கன்னிகோவில் வரை உள்ள சுற்றியுள்ள பகுதிகள்.

அபிஷேகபாக்கம்

கரிக்கலாம்பாக்கம்

உறுவையாறு

அரியூர்

மங்களம்

ஏம்பலம்

சிவராந்தகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கருவாடிக்குப்பம் மின்பாதை பகுதிகள்

மின்தடை நேரம்: காலை 10:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை

பாதிக்கப்படும் பகுதிகள்:

பூபாலன் நகர் (ஒரு பகுதி)

பிரியதர்ஷினி நகர் (ஒரு பகுதி)

கோரிமேடு காவலர் குடியிருப்பு (ஒரு பகுதி)

தட்டாஞ்சாவடி (ஒரு பகுதி)

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை

சுப்பையா நகர் (ஒரு பகுதி)

பாக்கம்உடையான்பேட்டை (ஒரு பகுதி)

அரசு அச்சகம் மற்றும் அதனைச் சார்ந்த சுற்றியுள்ள பகுதிகள்.

பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பைக் கொண்டு தங்களது அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறும், மின்சாரத் துறையின் இப்பராமரிப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

Source: Read Full Article