Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்

Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
News Image

மருத்துவ படிப்பு உள் ஒதுக்கீடு

எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பது பள்ளி மாணவர்களின் கனவாக இருந்து வந்தது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படியையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. வசதி படைத்தவர்களின் குழந்தைகள் மட்டும் பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி நீட் சிறப்பு பயிற்சி எடுத்து நீட் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்கள். இதனால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலையானது நீடித்து வந்தது. இதனால் நீட் தேர்விற்கு பயந்து ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்த எடப்பாடி

எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லையென மத்திய அரசு அறிவித்த நிலையில்,  சட்டமன்றத்தின் மூல்ம பல தீர்மானங்கள் கொண்டு வந்தும் பயனில்லாத நிலையே நீடித்து வந்தது. இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உளு ஒதுக்கீடு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மூலம், ஆண்டுதோறும் சுமார் 600 முதல் 630-க்கும் மேற்பட்டபவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

600 அரசு பள்ளி மாணவர்கள் பயன்

இந்த நிலையில் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசும் நீட் தேர்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தற்போதுள்ள மருத்துவ படிப்பிற்கான 7.5% உள் ஒதுக்கீட்டை 10% அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் 100 முதல் 150 தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பயனடையும் நிலையானது உருவாகும். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் விஜய் இது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்று நடைபெறுகின்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்ட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படவுள்ளது.

மருத்து உள் ஒதுக்கீடு 10% உயர்த்த திட்டம்

அந்த வகையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7.5% உள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், இதனை தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலைச்சர் விஜய் போடும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுக்குமா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks