திமுக எம்எல்ஏக்கள் கைது

திமுக கூட்டணியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த காங்கிரஸ், திடீரென திமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தவெக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் தற்போது வரை தேமுதிக மட்டும் உள்ளது. எனவே தமிழகத்தில் கால் பதிக்க இது தான் நல்ல சான்ஸ் என பார்த்து வரும் பாஜக, திமுகவை நெருங்கி வருகிறது. அதற்கு ஏற்ப திமுகவும் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இண்டியா கூட்டணி கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறது. இந்த நிலையில் தான் திமுக எம்எல்ஏ மீது பொய் வழக்கு போடப்படுவதாக திமுகவிற்கு ஆதரவாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தவெக அரசு அமைந்த நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு எதிரான அவதூறு பேச்சுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தான் ஒரு எம்எல்ஏ எனவும், தன்னை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும் என வாக்குவாதம் செய்தார். ஆனால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறுகையில், பேரவையின் அமைப்பு எல்லைக்குள், 291 விதியின் படி அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது.

திமுக எம்எல்ஏ மீது பொய் வழக்கு போடுவதா.?

பேரவை அமைப்பு எல்லை என்பது, சட்டமன்ற பேரவை உறுப்பினர்களை பொறுத்தவரை பேரவை மண்டபம் அதன் புறமண்டபங்கள் அமைச்சர் அல்லது அறைகள் தலைமைச் செயலகத்தில் இருந்து சட்டமன்ற குழுக்கள் கூடும் அறை என சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து, தவெக அரசின் செயல்பாட்டை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்மீது பொய்வழக்கு போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினரை கைதுசெய்ய கூறியுள்ளார்.

இது சட்டமன்ற மரபுகளுக்கும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கும், முரணானது, தவறானது. என்னுடைய அனுமதி தேவையில்லை என்று உதாரணத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டபோது, அன்றைக்கு நாடாளுமன்ற தலைவரிடம் அனுமதி பெற்றுதான் அன்றைய பிரதமர் மொராஜிதேசாய் அரசு அவரை கைது செய்தது. நாடாளுமன்ற நெறிமுறைகள், பிரிட்டிஸ் "மே" உடைய நெறிமுறைகளுக்கு ஒப்ப இந்திய நாடாளுமன்ற முறையும் இருக்கிறது.

சபாநாயகர் நடுநிலையோடு செயல்படனும்

இந்திய நாடாளுமன்ற முறைக்கு அடிப்படையாக ஹவுவாண்ட் சத்தர் (Kout and Shaddar)கோட்பாடுகள்படி எந்த நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ கைது செய்யப்படும்போது, குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட அவைத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு மட்டுமல்ல, விதிமுறைகளும் ஆகும். இதை மறந்துவிட்டு, தமிழ சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் துலாக்கோல் போல் நடுநிலமையில் இல்லாமல் ஆளும் கட்சிக்கு சாதகமாக சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு என்னுடைய அனுமதி தேவையில்லை என்று பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

சட்டமன்ற பேரவைத் தலைவர் அவர்கள் நடுநிலையோடு தனது அலுவல் பணிகளை செய்வதுதான் நாடாளுமன்ற முறையின் அடிப்படை கூறாகும். இதைப்போல, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்? இனியாவது நாடாளுமன்ற நடைமுறைகளை பேரவைத்தலைவர் கடைபிடித்து நடுநிலையோடு செயல்பட வேண்டுமென நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source: Read Full Article