DMK Mk Stalin:  திமுக தலைவர் ஸ்டாலினின் அறிக்கையில் ராகுல் காந்தியின் கைதுக்கோ, மாணவர்களின் மீதான தாக்குதலுக்கோ, மத்திய அரசுக்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக CJP அமைப்பினர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டங்கள் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வு, பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் தான் முதலில் எச்சரித்தோம். அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

”நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்”

சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கு வழிகாட்டி, முதல் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது: #நீட்ஒழிப்பு . மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதுதான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என திமுக தலைவர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக எதிர்ப்பை கைவிடும் திமுக?

ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கண்டனம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசு நடத்தும் தேர்வில் முறைகேடு நடந்ததாக தான் இந்த ஒட்டுமொத்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக அரசை நோக்கி எந்தவொரு கேள்வியையும் ஸ்டாலின் முன்வைக்கவில்லை. இதுபோக, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் கைதுக்கும் ஸ்டாலின் கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை. இதனால், மாநிலத்தில் அதிகாரத்தை இழந்த திமுக, தங்களை தற்காத்துக்கொள்ள பாஜக எதிர்ப்பு அரசியலை முழுமையாக கைவிட தொடங்கிவிட்டதா என்று பேச்சு தீவிரமடைந்துள்ளது.

Source: Read Full Article